நடிகர் சிம்ஹா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் "வசந்த முல்லை". இந்த திரைப்படம், பிப்ரவரி 10 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. மேலும், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வசந்த முல்லை வெளியாகிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | மாஸா சண்டை செய்றாங்களே.. Suriya 42 நாயகி திஷா பட்டானி பகிர்ந்த தெறி வீடியோ!
அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'வசந்த முல்லை'. இதில் பாபி சிம்ஹாவுகு ஜோடியாக நடிகை கஷ்மீரா பர்தேசி நடித்துள்ளார். நடிகர் ஆர்யா சிறப்பு தோற்றத்திலும் வசந்த முல்லை படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் பிப்வரி 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, 'நேரம்', 'பிரேமம்' படப் புகழ் ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். மிஸ்ட்ரி திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை முத்ரா‘ஸ் ஃபிலிம் ஃபேக்டரி என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரேஷ்மி சிம்ஹாவும், எஸ். ஆர். டி. எண்டர்டெய்ன்மென்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ராம் தல்லூரியும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த நிலையில், நடிகர் பாபி சிம்ஹா, நடிகை கஷ்மீரா பர்தேசி உள்ளிட்டோர் Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். அதில், தங்களது திரைப்பட பயணம் குறித்தும் பல்வேறு கருத்துக்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
அப்போது இப்படத்தின் படப்பிடிப்பு தளம் மற்றும் இப்படத்துக்கு ஸ்டார் நடிகர்களை கமிட் பண்ணாதது ஏன் என்பது பற்றி பாபி சிம்ஹா பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட ஹீரோயின் கஷ்மிரா பர்தேசி, “நான் ஒரு ஸ்டார் நடிகை இல்லை என்பதால் என்னை கமிட் செய்தார்கள்” என ஜாலியாக கூற, அப்போது இடைமறித்த நடிகர் சிம்ஹா, “இல்லை இல்லை.. அப்படியெல்லாம் இல்லை. ஆர்ட்டிஸ்ட் தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். பிரபல நடிகர்கள் ஒருநாள் வரலாம், அவர்களின் உடல்நிலை சரியில்லாமல் போனால், வேறு படங்களிலும் அவர்கள் நடிக்க முடியாமல் போகலாம். எதுவேண்டுமானாலும் நடக்கலாம். அதனாலேயே நடிகர்கள் தேர்வில் கவனமாக இருந்தோம்.
ஏற்கனவே கொரோனா நேரத்தில் செட் போட்டு, கொரோனோ , லாக்டவுன் என வந்ததால் அனைத்தாலும், அதிக பட்ஜெட் செலவாகிவிட்டது என்பதால் ப்ரொடியூசருக்கு மேலும் செலவு வைக்க கூடாது என்று நினைத்தோம். எனவே சென்னை சத்யம் திரையரங்கின் ரெஸ்ட் ரூமில் லைல் லொகேஷனில் 2 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அங்கு யூரினல் அருகே விழுந்து உருளக்கூடிய காட்சிகள் எல்லாம் இருந்தது. இதேபோல் காஷ்மீரிலும், மூணாரிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
எனவே மழை, குளிர் அனைத்தும் இருக்கும், இதுதான் இந்த களம் என்பதை சொன்னோம். அதனால்தான் இவரை தேர்வு செய்தோம். இதேபோல் இப்படத்தின் ஆரம்பத்தில் 20 நிமிடங்கள், கிளைமாக்ஸில் 20 நிமிடங்கள் தவிர்த்து படத்தின் ஒரு ஷாட் மிஸ் பண்ணினாலும் கதை புரியாது.” எனறு குறிப்பிட்டார்.
Also Read | "Set போட்டு புரொடியூசருக்கு செலவு வைக்க கூடாது".. நிஜ தியேட்டர் Rest Room-ல நடிச்ச சிம்ஹா..! Vasantha Mullai