நடிகர் சிம்ஹா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் "வசந்த முல்லை". இந்த திரைப்படம், பிப்ரவரி 10 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. மேலும், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வசந்த முல்லை வெளியாகிறது.
Also Read | வெளிநாட்டில் மூத்த மகளுடன் சுந்தர் சி & குஷ்பு.. வைரலாகும் டூர் போட்டோஸ்!
அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'வசந்த முல்லை'. இதில் பாபி சிம்ஹாவுகு ஜோடியாக நடிகை கஷ்மீரா பர்தேசி நடித்துள்ளார். நடிகர் ஆர்யா சிறப்பு தோற்றத்திலும் வசந்த முல்லை படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் பிப்வரி 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, 'நேரம்', 'பிரேமம்' படப் புகழ் ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். மிஸ்ட்ரி திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை முத்ரா‘ஸ் ஃபிலிம் ஃபேக்டரி என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரேஷ்மி சிம்ஹாவும், எஸ். ஆர். டி. எண்டர்டெய்ன்மென்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ராம் தல்லூரியும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் பாபி சிம்ஹா, நடிகை கஷ்மீரா பர்தேசி உள்ளிட்டோர் Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். அதில், தங்களது திரைப்பட பயணம் குறித்தும் பல்வேறு கருத்துக்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். அப்போது பேசிய சிம்ஹா, வசந்த முல்லை திரைப்படம் தயாராகிம் வெளியீட்டுக்காக காத்திருந்த அந்த காத்திருப்பு நேரம் என்பது செம காண்டாக இருந்தது என்று ஜாலியாக பேசினார்.
மேலும் பேசிய சிம்ஹா இந்த திரைப்படத்துக்கு ஏற்கனவே கொரோனா நேரத்தில் செட் போட்டு, கொரோனோ , லாக்டவுன் என வந்ததால் அனைத்தாலும், அதிக பட்ஜெட் செலவாகிவிட்டது என்பதால் ப்ரொடியூசருக்கு மேலும் செலவு வைக்க கூடாது என்று பிரபல திரையரங்கத்தின் ரெஸ்ட் ரூமில் 2 நாள்கள் லைவ் லொகேஷனில் படப்பிடிப்பு செய்யப்பட்டதாகவும் அங்கு யூரினல் அருகே விழுந்து உருளக்கூடிய காட்சிகள் எல்லாம் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும், அவ்வளவு கஷ்டப்பட்டு இந்த படத்தை மிகவும் எமோஷனலாக கனெக்ட் செய்ய வேண்டும் என்கிற நோக்கில் உருவாக்கியதாகவும் குறிப்பிட்டார். இதற்கான பலன் எங்கேயோ திரும்பவரும் என கருதியதாக குறிப்பிட்டார்.
Also Read | விமரிசையாக நடந்த கருணாஸ் மகள் திருமணம்.. ஆனந்த கண்ணீரில் கிரேஸ்.. புகைப்படங்கள்..!