கிராண்ட் மஸ்தி, ஜெய் ஹோ, ஐ ஹேட் லவ் ஸ்டோரீஸ் உள்ளிட்ட பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்த புருனா அப்துல்லா தமிழில் சக்ரி டொலெட்டி இயக்கத்தில் தல அஜித் நடித்த ‘பில்லா 2’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த புருனா அப்துல்லா, சுற்றுலாவிற்காக இந்தியா வந்து மும்பையில் செட்டிலானார். விளம்பர படங்களில் நடித்த புருனா பின் திரைப்படங்களில் நடித்தார். ஸ்காட்லாந்தை சேர்ந்த ஆலன் பிரேசர் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் இதுவரை திருமணம் செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றனர்
இந்நிலையில், பிரபல மீடியா நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “எங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளர்கிறது. எனது குடும்பம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். குழந்தைக்கு 22 வாரம் ஆகிறது, அவர்/அவளது வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறோம். நாங்கள் இருவரும் பெற்றோர்களாவதற்கு தயாராக இருக்கிறோம், மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.