தமிழ் சினிமாவின் தளபதியாய் உயர்ந்த நிற்பவர் நடிகர் விஜய். அவரது நடனத்திற்கும், நடிப்பிற்கும் பல கோடி மக்கள் ரசிகர்களாக உள்ளனர். இன்ற பிறந்தநாள் காணும் அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இந்நிலையில் பிகில் படத்தில் பாண்டியம்மா வேடத்தில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. அவர் தளபதி விஜய் பிறந்தநாள் பிறந்த நாளுக்காக தனது தந்தையுடன் சேர்ந்து 'யூத்' படத்தில் வரும் 'ஆல்தோட்டா பூபதி' பாடலுக்கு நடனமாடி தளபதி விஜய்க்கு டெடிகேட் செய்துள்ளார்.