நடிகர் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தில் கலந்துக் கொண்ட படத்தின் ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, தளபதி விஜய்யின் ரசிகனாக இருக்க பெருமைப்படுவதாக கூறினார்.
ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது, தாம்பரத்தில் உள்ள சாய் ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, “தளபதி விஜய் இந்த படத்துல ஆடியிருக்க ஆட்டமே வேற.. அவருடைய ரசிகனாக இருக்க பெருமைபடுறேன். எத்தனை படம் பண்ணோம்னு முக்கியம் இல்லை.. என்ன படம் பண்றோம் தான் முக்கியம். சில விஷயங்கள சிலர் சொன்னா வேற லெவல் ரீச் இருக்கும்”.
“என்னோட 3வது படத்துலயே நான் இப்படி ஒர்க் பண்ணுவேனானு தெரியாது. ஆனா அவரோட 63வது படத்துக்கு இவ்ளோ முயற்சி போடுறாரு. தளபதி தான் இந்த தலைமுறையோட முகம். இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. எல்லார போலவும் தளபதி ரசிகனா தளபதி விஜய்யோட ஸ்பீச் கேட்க காத்துக்கிட்டு இருக்கேன்” என்று கூறினார்.
பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் சுவாரஸ்ய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இணைந்திருங்கள்.
. @dop_gkvishnu speaks ' #ThalapathyVijay indha padathula aadirka aatamae vera, Proud to be his fan' #Bigil #BigilAudioLaunch
— AGS Entertainment (@Ags_production) September 19, 2019