நடிகை அம்ரிதா அய்யர் விஜய்யுடன் நடித்த பிகில் படத்தின் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். அட்லி இயக்கிய இத்திரைப்படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இதில் ஃபுட்பால் ப்ளேயராக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் அம்ரிதா அய்யர். இதையடுத்து இவர் தற்போது கவனுடன் லிஃப்ட் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது தளபதி விஜய்யுடன் பெஸ்ட் மொமன்ட் பற்றி கேட்டதற்கு, ''எல்லாமே சிறந்த மொமன்ட் தான், எனக்கு ரொம்ப ஃபேவரைட் என்றால், எனது பிறந்தநாள்தான்'' என அவர் தெரிவித்துள்ளார். அம்ரிதா இந்த பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.