பிக்பாஸ் சீசன் 5வது நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல்வாரம் நடந்த கதை சொல்லும் டாஸ்கில் பலரும் தாங்கள் கடந்துவந்த கதைகளை கூறினர்.
இந்த கதைகளுக்கு ஹவுஸ் மேட்ஸ் லைக், லவ் மற்றும் டிஸ்லைக் ஆப்ஷன்களை கொடுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இவர்களுள் இசைவாணி, நமீதா, பாவனி ரெட்டி, ஐக்கி, சுருதி ஆகியோரின் கதைகள் மனதைத் தொட்டதாக கமல்ஹாசன் இந்த வார இறுதியில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பிக்பாஸ் வீட்டில் இருந்த நமீதா மாரிமுத்து, பிக் பாஸ் வீட்டில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறிவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் ஒரு லைக் மற்றும் ஒரு டிஸ்லைக் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க வேண்டும் என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது.
இதில் அபிஷேக் சின்னப்பொண்ணுவுக்கு டிஸ்லைக் கொடுத்தார். பிரியங்காவுக்கு லைக் கொடுத்தார். இதேபோல், சின்ன பொண்ணு பிரியங்காவுக்கு லைக் கொடுத்துவிட்டு, அண்ணாச்சிக்கு டிஸ்லைக் கொடுத்துள்ளார். ராஜூவை அண்ணா என கூறி அவருக்கு மதுமிதா லைக் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து பாவனிக்கு அபிஷேக் லைக் கொடுக்க, பாவனி இமான் அண்ணாச்சிக்கு லைக் கொடுத்துள்ளார். வருண் தாமரைச் செல்விக்கு டிஸ்லைக் கொடுத்தார். அக்ஷரா நாடியாவுக்கும் இசைவாணிக்கும் டிஸ்லைக் கொடுத்தார்.
தாமரை செல்வி உள்ளிட்ட சிலர் அக்ஷராவுக்கும், இன்னும் சிலர் நாடியாவுக்கும் டிஸ்லைக் கொடுத்துள்ளனர். அக்ஷராவுக்கு டிஸ்லைக் கொடுத்ததற்கான காரணமாக, அவர் தொடக்கத்தில் பேசியது போல் போக போக பேசுவதில்லை என்று சிலர் கூறியுள்ளனர்.
இதேபோல், நாடியாவுக்கு டிஸ்லைக் கொடுத்த சிலர், அவர் யாருடனும் பெரிதாக பேசிப் பழகுவதில்லை என்கிற காரணத்தை கூறியுள்ளனர். நாடியாவுக்கு டிஸ்லைக் கொடுத்த நிரூப், டிஸ்லைக்கிற்கான காரணம் சொல்ல வேண்டியதில்லை என்று கதை சொல்லும் டாஸ்கில் நாடியா கூறியிருந்தார் என்பதுதான் என தெரிவித்துள்ளார்.
இந்த டாஸ்க்கிற்கு பிறகு அக்ஷராவும் நாடியாவும் பேசிக்கொள்ளத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.