பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்-5 விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. முன்னதாக கதை சொல்லட்டுமா டாஸ்க்கில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் தங்களது கதைகளைக் கூறினர்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடந்துள்ளது. இதற்கென ஒரு விளையாட்டு போட்டி அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியின்படி, ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தங்கள் பின்னால் பலூனை கட்டிக்கொண்டு கையில் கிடைக்கும் ஊசி கொண்டு, அடுத்தவர் பலூனை உடைக்க வேண்டும்.
போட்டி தொடங்கியவுடனேயே அனைவரும் ஒரு நாள் முழுவதும் ஒருவரை ஒருவர் துரத்தி துரத்தி பலூனை உடைக்க, வருண் தன் பலூனை தானே உடைத்துக்கொண்டு விட்டார். பின்னர் தன் பலூன் உடைந்த பின்பும் அபினய் (ஜெமினி கணேசன் - சாவித்ரி பேரன்) நிரூப்பின் பலூனை, உடைக்க முயற்சிக்க, அதை நிரூப் எதிர்க்க, நிரூப்பின் எதிர்ப்பில் இருக்கும் நியாயத்தை அபினவிடம் அண்ணாச்சி விளக்கினார்.
ஆனால் அபினவ் மற்றும் வருண் இருவரும் கோபப்பட்டு, ரூல்ஸில் அப்படியெல்லாம் இல்லை என்று வாக்குவாதம் செய்தனர். கடைசியாக மீண்டும் ஐக்கி ரூல் புக்கை படிக்க, “யாருடைய பலூன் உடைகிறதோ.. அவர்கள் போட்டியில் இருந்து விலக்கப்படுகிறார்கள்” என இருக்க, மீண்டும் போட்டி தொடங்குகிறது.
கடைசி வரை உடைக்க முடியாத உயரமானவரான நிரூப்பின் பலூனை தாமரை செல்வி உடைத்துவிட்டார். தொடர்ந்து சின்ன பொண்ணுவுக்கும் தாமரை செல்விக்குமான ஃபைனல் போட்டி சூடாக, சின்னபொண்ணுவே தன் பலூனை உடைக்க தாமரை செல்வி பிக்பாஸ் வீட்டின் தலைவர் ஆனார். இதனை அடுத்து தாமரை செல்வியை இந்த வாரத்துக்கு எலிமினேஷன் பண்ண முடியாது என பிக்பாஸ் கூறிவிட்டார்.
முன்னதாக சின்ன பொண்ணுவிடம் போட்டியின் போது, நாடகமா நாட்டுப்புறமா என தனது தொழிலான நாடகக் கலையையும், சின்ன பொண்ணுவின் தொழிலான நாட்டுப்புற கலையையும் தாமரை சொல்வி சொல்லி விளையாடியிருந்ததாக சின்ன பொண்ணு குறிப்பிட்டு பின்னர் வருத்தப்படுகிறார்.
தொடர்ந்த்து தாமரை செல்வியிடம், சின்னபொண்ணு, “நானா தான் விட்டுக்கொடுத்தேன்” என கூற, “நீங்க விட்டுக்கொடுத்தீங்கனு சொன்னா நான் உங்களை கஷ்டப்படுத்திருக்கேனா? அப்படி இருந்தா மன்னிச்சிருங்க” என கூற, அதன் பின்னும் சின்ன பொண்ணு ஏதோ பேச, தாமரை அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.