பிக்பாஸ் வீட்டுக்குள் ஹவுஸ்மேட்ஸ் டாஸ்குகளை பின்பற்றி வந்து கொண்டிருந்தனர்.
இதனிடையே பிரியங்கா தனக்கு பசிக்கிறது என்று அழுது புலம்பி மிகப்பெரிய களேபரமே பண்ணிவிட்டார். இந்த பிக்பாஸ் வீட்டில் அனைவரும் பசி மற்றும் ஏதாவது வித்தியாசமான உணவை சாப்பிட வேண்டும் என்கிற ஆவல் நிறைந்து இருந்தபோதுதான் பிக்பாஸ் வீட்டின் முன்னால் பிரபலம், அதாவது முந்தைய சீசன் பிக்பாஸில் கலந்து கொண்ட முக்கியமான இளம் நடிகர் ஹரீஷ் கல்யாண் இணையதள காணொளி வழியே பிக்பாஸ் வீட்டில் கலந்துகொண்டார்.
அவருடன் பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் இருந்தார். ஆம், இவர்கள் இருவரும் தற்போது நடித்திருக்கும் ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்த அறிமுகத்துடன் இருவரும் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் பேச தொடங்கி இந்த திரைப் படத்தின் டிரைலரையும் பிக்பாஸ் வீட்டுக்குள் வெளியிட்டு இருக்கின்றனர்.
ஏ ஸ்டூடியோஸ் எஸ்பி சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கியிருக்கிறார். விஷால் சந்திரசேகர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வெளிவந்த பெல்லி சுப்புலு திரைப்படத்தின் ரீமேக் படமான இந்தப் படத்தை ஏற்கனவே ஹிந்தி மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்திருக்கிறார்கள். தமிழில் இந்த திரைப்படம் ஐந்து வருடங்கள் கழித்து ரீமேக்காகி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தின் ஒரு வரிக் கதையை பொறுத்தவரை பெண் பார்க்க போகும் ஹீரோ ஹரீஷ் கல்யாண், தான் பார்க்க போன பெண்ணை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை தவறுதலாக பார்த்துவிடுவார். பின்னர் அவர் மணப்பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அந்த அறை கதவு ஒரு சில கோளாறுகளால் லாக் ஆகிக் கொள்கிறது. பின்னர் இருவரும் அமர்ந்து பேசும் இந்த கதை பல திருப்பங்கள் மற்றும் சுவாரஸ்யங்களுடன் நிகழும்.
தமிழில் 1985இல் வெளிவந்த ஆண்பாவம் திரைப்படம் இதை நினைவூட்டும் என்றாலும் ஓமன பெண்ணே திரைப்படத்தின் கதையும் திரைக்கதையும் வேறு மாதிரி இருக்கும். கடைசியில் ஃபுட் டிரக் எனப்படும் நடமாடும் உணவகத்தை தொடங்குவது போல் அமைந்திருக்கும் இந்த திரைக்கதை ட்ரைலரில் பார்க்கும்பொழுது விறுவிறுப்பாக இருப்பதாக தெரிகிறது.
இந்த டிரைலர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதனை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் மற்றும் ப்ரியா பவானி சங்கர் இருவரும் போட்டியாளர்களுடன் பேசியது மட்டுமன்றி, அக்ஷரா மற்றும் நிரூப் இருவருக்கும் ஆம்லெட் போடும் டாஸ்க்கை கொடுத்து விடைபெற்றனர்.