www.garudavega.com

"விருப்பம் இருந்தா மத்தவங்ககிட்ட பேசப்போறேன்"..ஜனனி - அமுதவாணன் இடையே நடந்த வாக்குவாதம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

BiggBoss6 Tamil Janany Amudhavanan conversation in house

Also Read | துணிவு ஷூட்டிங்கில் அஜித்துடன் டான்ஸ் மாஸ்டர் கல்யாண்.. வைரலாகும் BTS போட்டோ..!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

BiggBoss6 Tamil Janany Amudhavanan conversation in house

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து மெட்டிஒலி சாந்தி முதல் எலிமினேஷனாக வெளியேறினார். பின்னர் அடுத்தடுத்த வாரங்களில் அசல், ஷெரினா ஆகியோர் வெளியேறினர். இந்நிலையில் கடந்த வாரத்தில் vj மகேஷ்வரி எலிமினேஷன் ஆனார்.

வார இறுதியில் நடிகர் கமல்ஹாசன் தோன்றி கடந்த வார செயல்பாடுகள் பற்றி ஹவுஸ்மேட்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ஜனனி, அமுதவாணனின் பகடைக்காயாக செயல்படுகிறாரா? என விக்ரமனிடம் கேட்டார் கமல்ஹாசன். அப்போது, ஸ்வீட் கடை டாஸ்க்கில் ஜனனியை விளையாட அனுமதிக்காமல் பாதுகாப்பதாக சக போட்டியாளர்கள் அமுதவாணன் மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர். அப்போது, தான் யாருடைய கைப்பாவையாகவும் செயல்படவில்லை என ஜனனி தெரிவித்திருந்தார்.

BiggBoss6 Tamil Janany Amudhavanan conversation in house

இந்நிலையில், அமுதவாணனுடன் கார்டன் ஏரியாவில் பேசிக்கொண்டிருக்கிறார் ஜனனி. அப்போது பேசிய அமுதவாணன்,"நான் என்ன உன்னை பிடித்து வைத்துக்கொண்டா இருக்கிறேன்?" என ஜனனியின் கேட்கிறார். இதற்கு " நீ என்னை பிடிச்சு வச்சிட்டா இருக்க? எனக்கு விருப்பம் என்றால் நான் மற்றவர்களோடு பேசப்போகிறேன்" என்கிறார் ஜனனி.

BiggBoss6 Tamil Janany Amudhavanan conversation in house

தொடர்ந்து பேசிய அமுதவாணன்,"எல்லாரும் தான் வேலைபாக்குறோம். அப்புறம் நான் உன்னை புடிச்சு வச்சிருக்கேன்னு சொல்றாங்க. பகடைக்காயா யூஸ் பண்றேன்னு சொல்றாங்க" என்கிறார். இதனை மறுத்த ஜனனி, "நீங்கள் என்னை யாரிடமும் பேசக்கூடாது எனச் சொல்லவில்லை" என்கிறார்.

 

Also Read | நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை ICU-வில் அனுமதி.. மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss6 Tamil Janany Amudhavanan conversation in house

People looking for online information on Amudhavanan, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Janani, Vijay Television, Vijay tv will find this news story useful.