பிக்பாஸ் வீட்டுக்குள் எப்போதும் ஜாலியாக வலம்வரும் GP முத்து, தனது குடும்பத்தினரிடம் பேசும்போது கண்கலங்கிவிடுகிறார். மேலும், தனது உறவினர்கள் பற்றியும் அவர் அன்போடு விசாரிக்கிறார்.
Also Read | Bigboss6 Tamil : "நாங்க நண்டு பொரிக்கிறதா இல்லையான்னு discussion-ல இருக்கோம்".. டக்குனு சொன்ன GP முத்து
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
இந்த சீசனில் யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
எப்போதுமே கலகலப்புடன் இருக்கும் ஜிப் முத்து, தனது குடும்பத்தினருடன் பேசுகையில் கண்கலங்கிவிடுகிறார். தான் இப்போதுதான் கண் விழித்ததாக கூறும் அவர், தனது பிள்ளைகளிடம்,"அம்மா சொல்றபடி கேளு, ஒழுங்கா ஸ்கூலுக்கு போ" என்கிறார். தொடர்ந்து தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஹாய் சொல்லும் முத்து,"பிள்ளைகளை பார்த்துக்கிடுங்க, நீங்க இருக்கீங்க கவலை இல்ல" என கலங்கிய கண்களை துடைத்துக்கொள்கிறார். மேலும், பிக்பாஸுக்கு வணக்கத்தை போட்டுவிட்டு, அன்றாட பணிகளை கவனிக்க செல்கிறார் GP முத்து.
❤️❤️❤️#GPMuthu #GPMuthuArmy #BiggBoss #BiggBossTamil #Biggbosstamils6 #BiggBossTamil6 pic.twitter.com/M7skvpe28G
— GP Muthu Army (@drkuttysiva) October 14, 2022
Also Read | கன்னடத்தில் பட்டைய கிளப்பும் 'காந்தாரா'.. படம் பார்த்த பின் நடிகர் தனுஷ் வைரல் ட்வீட்!