ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து மெட்டிஒலி சாந்தி முதல் எலிமினேஷனாக வெளியேறினார். பின்னர் அடுத்தடுத்த வாரங்களில் அசல், ஷெரினா ஆகியோர் வெளியேறினர். இந்நிலையில் கடந்த வாரத்தில் vj மகேஷ்வரி எலிமினேஷன் ஆனார்.
வார இறுதியில் நடிகர் கமல்ஹாசன் தோன்றி கடந்த வார செயல்பாடுகள் பற்றி ஹவுஸ்மேட்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ஜனனி, அமுதவாணனின் பகடைக்காயாக செயல்படுகிறாரா? என விக்ரமனிடம் கேட்டார் கமல்ஹாசன். அப்போது, ஸ்வீட் கடை டாஸ்க்கில் ஜனனியை விளையாட அனுமதிக்காமல் பாதுகாப்பதாக சக போட்டியாளர்கள் அமுதவாணன் மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர். அப்போது, தான் யாருடைய கைப்பாவையாகவும் செயல்படவில்லை என ஜனனி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமுதவாணனுடன் கார்டன் ஏரியாவில் பேசிக்கொண்டிருக்கிறார் ஜனனி. அப்போது,பகடைக்காய் விஷயம் குறித்து நீண்ட பேச்சில் அமுதவாணன் "நான் எல்லாத்தையும் அனாலிசிஸ் பண்ணிட்டேன். விக்ரமன் என்ன யோசிக்குறாரு? மத்தவங்க என்ன யோசிக்குறாங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன். அதுக்கு தான் சொல்றேன். நீ எதுவாக இருந்தாலும் இந்த ஷோ முடிந்த அப்புறம் பேசிக்கொள். நீ சரியாக தான் நடந்துகொள்கிறாய். ஆனால், நீ மாட்டிக்காத-ன்னு தான் சொல்லுறேன். அவ்ளோதான். என்னால மத்தவங்களுக்கு பிரயோஜனம் இருக்கணும். யாருக்கும் பிரச்சனை வரக்கூடாது" என்கிறார்.
மேலும், விக்ரமன் தன் மீதுகொண்ட வெறுப்பால் ஜனனியை பகடைக்காயாக பயன்படுத்திக்கொண்டதாகவும் அமுதவாணன் குற்றம்சாட்டியிருக்கிறார். அப்போது பேசிய அமுதவாணன்,"நீ எங்க டீம்ல இருக்க. ராமுக்காக தான் நீ போன. அதனால இப்படி ஒரு விஷயமே கிடையாது. என்னை கலாய்க்கிறதுக்கு உன்ன யூஸ் பண்ணிட்டு பகடைக்காயா பயன்படுத்துறேன்னு எப்படி ஒருத்தர் சொல்ல முடியும்?" என்கிறார்.