www.garudavega.com

நடிகர் தனுஷின் 'பவர் பாண்டி'யில் நடிச்ச சோம்.. அந்த சீனில் அவரை பார்த்து இருக்கீங்களா...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் தற்போது முக்கியமான போட்டியாளராக மாறி இருப்பவர் சோம். இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பைனல்ஸ் வரை வந்தவர். அதன் பின்னர் வேறு ஒரு துறையான 'மார்ஷியல் ஆர்ட்ஸ்' கற்று அதில் சிறந்து விளங்கி வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அவர் செய்யும் சேட்டைகள் பலவும் வைரலாகி வருகிறது. பலருக்கும் சோமீன் கள்ளங் கபடமில்லாத மனது பிடித்திருக்கிறது என்று சொல்லலாம்.

biggboss4 tamil som acted in power pandi'பவர் பாண்டி'யில் நடிச்ச சோம்

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு தொகுத்து வழங்கிய 'அழகிய தமிழ் மகன்' என்ற நிகழ்ச்சியில்தான் அவர் பங்கேற்றார். சில விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் சூர்யாவின் சூரரைப் போற்று படத்திலும் ஒரு சிறிய காட்சியில் அவர் நடித்திருந்தார். ஆனால் நீண்ட காலமாகவே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடிக்க வேண்டும் என்பதே இவரின் ஆசையாக இருந்து வந்துள்ளது. அப்படி நடிகர் தனுஷ் இயக்கிய 'பவர் பாண்டி' படத்தில் ராஜ்கிரண் உடன் ஒரு சிறிய காட்சியில் பிக்பாஸ் சோம் தோன்றியிருக்கிறார். அதாவது 'லைஃப் ஆப் பவர் பாண்டி"  என்கிற பாடலில் ராஜ் கிரனிடம் உதவி கேட்பது போல் சோம் நடித்துள்ளார். இந்த விஷயத்தை தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

நடிகர் தனுஷின் 'பவர் பாண்டி'யில் நடிச்ச சோம்.. அந்த சீனில் அவரை பார்த்து இருக்கீங்களா...? வீடியோ

Tags : Som, Dhanush

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss4 tamil som acted in power pandi'பவர் பாண்டி'யில் நடிச்ச சோம்

People looking for online information on Dhanush, Som will find this news story useful.