திருமண அறிவிப்பை வெளியிட்ட வனிதா - அவரது மகளின் கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நட்சத்திர தம்பதிகளான நடிகர் விஜய்குமார் - மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகளான வனிதா, தளபதி விஜய்யுடன் 'சந்திரலேகா' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். பீட்டர் பால் திரைப்பட இயக்குநர் என்று குறிப்பிட்டுள்ள அவர், அவர்களது திருமணம் அவரது மகள்களின் அனுமதியுடன் தான் நடைபெறுகிறது என்பதையும் பதிவு செய்துள்ளார்.  மேலும், திருமணம் நெருங்கிய நண்பர்களுடன் எளிமையாக நடைபெறுகிறுவதால், திருமண நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆகியவற்றை திருமணத்திற்கு பிறகு வெளியிடுவதாக உறுதியளித்துள்ளார். 

இதனையடுத்து அவருக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அவரது மகள் ஜோவிகா, ''நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்று உங்களுக்கு தெரியும். என்ன நடந்தாலும் நான் உங்களை ஆதரிப்பேன். நான் உங்களிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். உங்களுடன் இருந்த இந்த 15 வருடங்களும் சிறப்பாக இருந்தது.

உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு பிடித்த வழியில் வாழ்கிறீர்கள். அதில் எந்த தவறும் இல்லை. உங்களிடம் இருக்கும் மகிழ்ச்சிக்கு நீங்கள் நிச்சயம் தகுதியானவர். நான் இதனை உங்கள் மகளாகவும், நண்பியாகவும் சொல்கிறேன். வாழ்த்துகள் மா'' என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த வனிதா, ஜோவிகா, நீ என்னை அழ வைத்து விட்டாய். அழுகையை என்னால் நிறுத்த முடியவில்லை. எல்லாவற்றிலும் எனக்கு துணை நின்றதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  நீயும் ஜெயாவும் என்னுடன் இருப்பது  போதும். மற்றவை பற்றி எனக்கு கவலையில்லை. நீ என்னுடைய பாகுபலி'' என்று குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I'm counting my blessings

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss Vanitha's daughter Jovika reacts to her mother's wedding news | திருமண அறிவிப்பை வெளியிட்ட பிக்பாஸ் வனிதாவிற்கு அவரது மகள் கமெண

People looking for online information on Marriage, Peter Paul, Vanitha will find this news story useful.