பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 30ஆம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, அபினய், ஷாரிக் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். வனிதா தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாக கூறி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
கமல்ஹாசன் விக்ரம் பட ஷூட்டிங் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விலகியதால் சிம்பு தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். வெளியேற்றப்பட்ட செய்யப்பட்ட சுரேஷ் சக்கரவர்த்தியும், விஜய் டிவி காமெடியன் சதீஷும் வைல்டு கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிற சீசன்களை போலவே, ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கும் அதிக வரவேற்புள்ளது. இந்த வாரத்தில் கிராமத்து காதாபாத்திரங்கள், பிராது விதிமுறைகள் மற்றும் கிராம செட்அப் என ஒட்டு மொத்த பிக்பாஸ் செட்டும் கிராமத்து பின்னணியில் அமைந்திருந்தது. இதில், பிக்பாஸ் போட்டியாளர்கள் இரண்டு குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதே போல, பிக்பாஸ் வீடும் ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, வேலி போடப்பட்டிருந்தது.
இரண்டு தலைக்கட்டு குடும்பங்களில் ஒன்று சினேகனின் குடும்பம். மற்றொன்று பாலாஜியுடையது. இதில் சினேகனுடைய மனைவியாக அனிதாவும், பாலாஜியின் மனைவியாக தாமரையும் வருகின்றனர். மற்ற போட்டியாளர்களும் இரு குடும்பத்தில் சில கதாபாத்திரங்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதில், ஊரின் கிழவியாக வருபவர் ஜூலி.
கிராமத்து டாஸ்க் அறிவிக்கப்பட்டதும், ஜூலி மற்றும் நிரூப் ஆகியோருக்கு இடையே சண்டை வெடித்தது. இதன் பிறகு, அனிதா மற்றும் ஜூலி ஆகியோர், ஒருவருக்கு ஒருவர் கோபப்பட்டு கொண்டனர். பிராது டாஸ்க்கின் போது, பாலா மற்றும் அனிதா ஆகியோர், மாறி மாறி கருத்துக்களால் மோதிக் கொள்ள, நடுவில் என்ட்ரி கொடுத்த ஜூலி, அனிதாவிடம் கோபத்தில் சில வாக்குகளைத் தெரிவித்திருந்தார்.
அதே போல் தாமரை, சுரேஷ் இடையே பழமொழி போரும் நடைபெற்று கலகலப்பானது. கூரையில் ஏறி கோழி பிடிக்க தெரியாதவன். வைகுண்டத்தில் ஏறி வானவில் ஆடுதுனு சொன்னானாம் என்றும், "நாய் கெட்ட கேட்டுக்கு ஞாயித்துகிழமை லீவ் கேட்டானாம்..." என சுரேஷை பங்கம் பண்ணிவிட்டார் தாமரை.