பிக்பாஸ் போட்டியில் அறந்தாங்கி நிஷா தனது அதிருப்தியை அர்ச்சனாவிடம் வெளிப்படுத்தினார்.
விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் நடிகை ரேகா முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று பிக்பாஸ் போட்டியில் கேப்ரியல்லா செய்த செயல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போட்டியாளர்களுக்கான லக்சுரி பட்ஜட் டாஸ்கில், போட்டியாளர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாயின்ட்டில் வீட்டுக்கு தேவையானதை தேர்வு செய்தனர்.
அப்போது அறந்தாங்கி நிஷா, வீட்டுக்கு தேவையான இஞ்சி பூண்டு பேஸ்ட் உள்ளிட்டவற்றை தேர்வு செய்ய, கேப்ரியல்லா பிட்சா, பானிபூரி உள்ளிட்ட பொருட்களை எடுத்தார். இதனால் அறந்தாங்கி நிஷா கடுப்பாகி, ''நான் என்ன இஞ்சி பூண்டு பேஸ்டை எனக்காகவா எடுத்தேன். நான் மட்டுமா அதை திங்க போறேன்'' என தனது அதிருப்தியை அர்ச்சனாவிடம் வெளிப்படுத்தினார்.
இதை பார்த்த பார்வையாளர்களும், நிஷாவின் மீது எந்த தவறும் இல்லை., கேப்ரியல்லா செய்தது தவறுதான் என்று சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
#Nisha is right, #Gabriella should think about the house as a whole. Pizza/pani puri, dunno how much will be provided. They would need to think for the whole house than individual interests. Hope they get more tho.
10 ruba, 10 ruba was funny. 😂#BiggBossTamil4 #BiggBossTamil
— Cinema Kathambam (@CinemaKathambam) October 29, 2020