தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், ஒளிபரப்பாகி வருகிறது.
Also Read | திருமணமாகி ஒரு மாதம்.. கௌதம் கார்த்திக்கை டேக் செய்து மஞ்சிமா நெகிழ்ச்சியான பதிவு..!
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம் மற்றும் ஜனனி ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். கடந்த வாரம் தனலெட்சுமி வெளியேறினார்.
தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம், விக்ரமன், மைனா, அமுதவாணன் உள்ளிட்ட 9 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர். இனி வரும் நாட்கள் மிக முக்கியமானவை என்பதால், அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்று வரை முன்னேற டாஸ்க்கில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கட்டாயத்திலும் உள்ளனர். இதனால், வரும் நாட்கள் விறுவிறுப்பு நிறைந்தவையாக இருக்கும் என்றும் பிக்பாஸ் பார்வையாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதனையடுத்து, இந்த வாரத்திற்காக போட்டியாளர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி ஒன்றை பிக் பாஸ் கொடுத்துள்ளது. Freeze Task எனப்படும் சுற்றில், போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தருகின்றனர். மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், ரச்சிதாவின் தாயார் உள்ளிட்டோரும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தனர்.
ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இதே போல, ADKவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். அவர்களை கண்டதும் ஏடிகே ஆனந்த கண்ணீரில் ஆரத்தழுவினார்.
பின்னர் தாய் தந்தையிடம் கலந்துரையாடினார். "எனக்கு விக்ரமன், அமுதவாணனை ரொம்ப பிடிக்கும்" என்று ஏடிகே கூறுகிறார். அவருடைய தந்தை "எனக்கும் விக்ரமனை பிடிக்கும்" என்று கூறுகிறார்.
அடுத்த தருணங்களில் "விக்ரமன் நல்ல பையன்பா" என ஏடிகே தந்தை கூற "சூப்பர்" என ஏடிகே பதில் அளித்தார். ஏடிகே அம்மாவும் "என் பொண்ணு உனக்கு வாழ்த்து சொல்ல சொன்னா. ஏடிகேவை நல்லா பாத்துக்கிட்டதுக்கு" என்று விக்ரமனிடம் வாழ்த்து கூறுகிறார்.
Also Read | நாக சைதன்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் 'கஸ்டடி'.. ரிலீஸ் எப்போ? OFFICIAL!