எல்லாரும் ஏன் அதையே கேக்குறீங்க?....ஒருவழியாக முற்றுப்புள்ளி வைத்த பிக் பாஸ் ஜூலி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். நேற்றைய தினம் பேசிய பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Biggboss julee Atlast answers to An important question of her fans பொதுமக்களின் தொடர் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த பிக் பாஸ் ஜூலி

இந்நிலையில் பிக் பாஸ் மூலம் பிரபலம் ஆனவர் ஜுலி. அதன் பிறகு சில படங்களிலும் நடித்தார். தற்போது அவர் ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறியுள்ளார். அதாவது "தற்போது உங்கள் வேலை என்ன. மீண்டும் நர்ஸ் வேலைக்கு திரும்பி போவீர்களா" என்று கேட்டிருக்கிறார் அந்த நெட்டிசன்.

அதற்கு பதிலளித்த ஜூலி, "எல்லாரும் இதையே தான் கேட்கிறீர்கள். நான் இப்பொழுது சினிமா துறையில் இருக்கிறேன். மருத்துவம் என்பது மிகவும் புனிதமான வேலை அதற்கு முழு கவனமும், கடின உழைப்பும் தேவை. எல்லா வேலைகளையும் போல பகுதி நேரமாக இந்த வேலையை செய்ய முடியாது. என்னால் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளையும் செய்ய முடியாது. ஏனென்றால் திடீரென்று ஷூட்டிங் வரும். ஆனால் அங்கு நோயாளிகள் எனக்காக காத்துக் கொண்டு இருப்பார்கள். என்னால் அவர்கள் உயிரோடு விளையாட முடியாது என்று கூறியுள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss julee Atlast answers to An important question of her fans பொதுமக்களின் தொடர் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த பிக் பாஸ் ஜூலி

People looking for online information on Biggboss, Corona, Julee, Julie, Season 3, Tamil will find this news story useful.