பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கியது முதலே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு களைகட்டத் தொடங்கியது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் அறிமுகமான முதல் போட்டியாளர் கானா பாடகர் இசைவாணிதான். டைமிங், ரைமிங்கோடு கூடிய துள்ளலான கானா பாடலை பாடி அறிமுகமான இசைவாணி தமது இந்த பாடல் வாழ்வு குறித்து தொடக்கத்தில் நடிகர் கமல்ஹாசனிடம் பகிர்ந்துகொண்டார்.
இந்நிலையில் பிக்பாஸ் வைத்துள்ள ‘கத சொல்லட்டுமா’ டாஸ்க்கில் அனைவரின் கதைகளையும் கேட்டு மற்றவர்கள் லைக், டிஸ்லைக் மற்றும் லவ் எமோஜிகளை சுவரில் பதிக்க வேண்டும். முதல் ஆளாக வந்த இசைவாணி, நிறைய ஆடைகளை தான் விரும்பிய போதிலும், தனக்கு போட்டுக்க கூட ஆடைகள் இல்லாத சூழ்நிலை இருந்ததாக குறிப்பிட்டார்.
மேலும், வாடகை கொடுக்க முடியாமல் வீடு மாறிக்கொண்டே அவல நிலையால் கிடைத்த அவமானம், பெண் என கூறி கானா பாடல் பாட முயற்சித்தபோது நிகழ்ந்த ஒடுக்கம் மற்றும் புறக்கணிப்புகள் உள்ளிட்டவற்றை பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.
அத்துடன் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டம். அதையும் தன் தந்தை தனக்காக விட்டுக் கொடுத்துவிடுவார். படிப்பை நிறுத்திவிட்டு அண்ணன் வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டது, ஒரு கட்டத்தில் செத்துவிடலாமா என்றெல்லாம் யோசித்தது உட்பட அனைத்தையும் கூறி அழத் தொடங்கினார். இருப்பினும் மேலே வரவேண்டும் என அனைவருக்கும் மோட்டிவேஷன் தரும்படியான வார்த்தைகளை கூறி பாசிடிவாக கானா பாடல் ஒன்றை பாடி மாஸ் காட்டினார்.
இவருடைய கதையை கேட்டு உருகிப் போன யாருமே டிஸ்லைக் போடவில்லை. அனைவருமே லைக்ஸ் மற்றும் லவ் எமோஜிகளை கொடுத்துள்ளனர். கானா பாடகர் இசைவாணி, 'பிபிசி'-யின் '2020 ஆம் ஆண்டுக்கான 100 சிறந்த பெண்கள்' பட்டியலில் இடம் பிடித்த ஒரே தமிழ்ப் பெண். இவர், இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' இசைக்குழுவைச் சேர்ந்த பாடகர்களில் ஒரே பெண் கானா பாடகர் ஆவார்.
Also Read: ‘அட்ரா சக்க’.. 5வது சீசன் ‘பிக்பாஸ்’ல கன்ஃபெஷன் ரூம்க்கு அழைக்கப்பட்ட முதல் போட்டியாளர்!