விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களால் பெரிதும் பார்க்கப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் முதன்மையான நிகழ்ச்சியாக கடந்த நான்கு சீசன்களில் உருவெடுத்திருக்கிறது.
பிக்பாஸ் 5வது சீசன்:
பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்களாக நடந்து கொண்டு இருக்கிறது. இதன் ஐந்தாவது சீசனும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில், கமல்ஹாசன் வார இறுதியில் வந்து போட்டியாளர்களிடையே பேசுவார்.
அவர்களின் நிறை குறைகளை சுட்டிக் காட்டுவதுடன் பார்வையாளர்கள் முன் வைக்க விரும்பும் விமர்சனங்களையும் போகிறபோக்கில் ஒரு குறிப்பாக கொடுத்துவிடுவார் கமல். அதை வைத்து போட்டியாளர்கள் தாங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
பிக்பாஸ் குரல்:
எனினும் போட்டியாளர்கள் தங்களுடைய இயல்புடன் பிக்பாஸ் வீட்டுக்குள் விளையாட வேண்டும். விளையாட வேண்டும் என்பதைவிட, பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் சக போட்டியாளர்களுடன் தங்கி, உண்டு, உடுத்து, உறங்கி, வாழ வேண்டும் என்பதால் இது கிட்டத்தட்ட ஒரு வாழ்வியல் ரியாலிட்டி ஷோவாகவே இருக்கிறது.
கண்ணுக்கு தெரியாத ஒரு குரல் தான் இந்த போட்டியாளர்களை வழிநடத்தும். அந்த குரல் அவ்வபோது அதிகாரம் செய்யும், அந்த குரலின் வாய்ச் சொல்லுக்கு கட்டுப்பட்டு போட்டியாளர்கள் நடப்பர்.
தாம் என்ன தவறு செய்தாலும் அது யாருக்கும் தெரியாது என்று போட்டியாளர்கள் கருதும் போது கூட, அந்த குரல் அவர்களுக்கு நினைவுக்கு வரும். சற்றே நடுக்கத்தை வரவழைக்கும் குரலாக ஒரு குரல் பலராலும் பார்க்கப்படுகிறது என்று சொன்னால் அதுதான் பிக்பாஸ் குரல்.
கண்டிப்பும் கறாரும் கொண்ட அந்த பிக்பாஸ் குரல் கடந்த சீசன்களில் போட்டியாளர்களிடையே மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசி இருப்பதையும் காணமுடியும். எப்போதாவது ஒருமுறை கருணை சுரக்கும் அந்த குரலின் நெகிழ்ச்சியான சம்பவத்தை மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காணமுடிந்தது. ஆம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரின் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து போட்டியாளர்களை சந்தித்து பேசி விட்டு சென்று கொண்டிருக்கின்றனர்.
குழந்தை ஷனாயா:
அந்த வகையில் பாவனியின் சகோதரி மற்றும் தாயார் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்தனர். அவர்கள் பாவனியை சந்தித்துப் பேசினர். அத்துடன் மற்ற போட்டியாளர்களையும் சந்தித்து பேசினர். அப்போது பாவனியின் சகோதரி, அவருடைய குழந்தையை அழைத்து வந்தார்.
ஷனாயா என்கிற பெயர் கொண்ட அந்த குழந்தை பலருக்கும் பிடித்தமான சுட்டிக் குழந்தையாக இருந்தது. குழந்தை உள்ளே வந்ததும் அனைவரையும் வரவேற்ற பிக்பாஸ் குழந்தை பிரத்தியேகமாக வரவேற்றார். அப்போது பாவனி, அவருடைய சகோதரி உள்ளிட்டோர் பிக்பாஸிடம் நலம் விசாரிக்கச் சொல்லி அந்த குழந்தையிடம் கூறுகின்றனர்.
கல்லுக்குள் ஈரம்:
அப்போது அந்த குழந்தை பிக்பாஸிடம், “ஹவ் ஆர் யூ பிக்பாஸ்?” என்று நலம் விசாரிக்க, அதற்கு பிக்பாஸூம் பதிலுக்கு, “நான் நன்றாக இருக்கிறேன்! நீ எப்படி இருக்கிறாய்?” என்று நலம் விசாரிக்கிறார். நினைத்துப் பார்க்க முடியாத ஒரு கற்பனையாக இந்த உரையாடல் அனைவருக்கும் தெரிந்திருக்கும். பிக்பாஸ் பேசுவதை கொஞ்சம் விழிப்புடனும், சற்றே மூளையை கூர்தீட்டிக் கொண்டும் கவனித்தால் தான் புரியும் என்கிற ஒரு கருத்து நிலவி வருகிறது.
இந்த நிலையில் சின்ன குழந்தையுடன் பிக்பாஸ் தன்னுடைய குரலின் காந்தத் தன்மை மாறாமல், அதேசமயம் அன்புடன் பேசி இருப்பது கொஞ்சம் புதுமையாகத் தான் இருந்தது. அட நம்ம பிக்பாஸ்க்கு இப்படியெல்லாம் கூட பேச தெரியுமா? என்று ரசிகர்கள் பேசும் அளவுக்கு நம் ‘பெருசு’ பிக்பாஸ் அந்த குழந்தையுடன் பேசி நிகழ்ச்சியை ஏற்படுத்தினார்.