www.garudavega.com

‘ரொம்ப பெரிய இழப்பு!’.. பிக்பாஸ் கணேஷின் மனைவியும் சீரியல் நடிகையுமான நிஷா கண்ணீர் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவியின் பல சீரியல்களில் நடித்து வரும் நடிகை தான் நிஷா. நிஷா சீரியல் மட்டும் இல்லாமல் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குபவர்.

BiggBoss ganesh wife actress nisha lost her grandma

இவருக்கு பல தளத்திலும் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பிரபல சீரியல் கனா காணும் காலங்கள். இந்த சீரியலில் தொடக்கத்தில் அறிமுகமானவர்தான் நடிகை நிஷா.

அதனைத் தொடர்ந்துதான் பின்னர் சன் டிவியில் வள்ளி, தெய்வமகள் உள்ளிட்ட சீரியல்களிலும் நிஷா நடித்தார். இதேபோல் மகாபாரதத்திலும் நடித்து புகழ் பெற்ற நிஷா விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ், சரவணன் மீனாட்சி, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட சீரியல்களிலும் தோன்றினார். பின்னர் ஜீ தமிழ் டிவியில் தலையணை பூக்கள் சீரியலிலும் நடித்த நிஷாவை பலராலும் மறக்க முடியாது. நடிகை நிஷா இப்படி டிவி சீரியல்களில் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தார்.

திரைப்படங்களை பொறுத்தவரை இவன் வேற மாதிரி, விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன், என்ன சத்தம் இந்த நேரம், சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த வில் அம்பு உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகையாக நிஷா நடித்திருப்பார். பின்னர் பிரபல திரைப்பட நடிகர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் கணேஷ் வெங்கட்ராமனை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில்தான் சீரியல் நடிகை நிஷா தம்முடைய பாட்டி கமலா உடல்நலக்குறைவால் காலமானதாகவும்,  இதனால் தான் மிகுந்த சோகத்தில் இருப்பதாகவும் தெரிவித்து, அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் குறிப்பிட்டு தம்முடைய இன்ஸ்டாகிராமில் உருக்கமாக ஒரு பதிவை எழுதியிருக்கிறார்.

அந்த பதிவில், “என் வாழ்க்கையில் யாராலும் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம் உண்டாகியுள்ளது. என் பாட்டியை இழந்துவிட்டேன். இது ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு. என்னுடைய கமலா பாட்டி நன்றாக சமைப்பார். எப்போதும் அரவணைப்பார். அவர் நல்ல ஆசிரியர். நல்ல நகைச்சுவையாளர் மற்றும் எப்போதுமே சிறந்த தோழியாக இருக்கக் கூடியவர். என்னுடைய செல்ல பாட்டி .. அமைதி அடையுங்கள்.” என்று தெரிவித்திருக்கிறார்.

நிஷாவின் பாட்டியின் மறைவால் வாடும் நிஷா மற்றும் அவருடைய குடும்பத்திற்கு சின்னத்திரை துறையினரும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நிஷாவின் கணவரும் பிக்பாஸ் போட்டியாளரும் பிரபல நடிகருமான கணேஷ் வெங்கட்ராமன் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கிறார்.

ALSO READ: ஆக்‌ஷன் பிளாக் ஸ்டார்ட் ஆயிடுச்சு!!.. வெளியான #Vishal31 வேற லெவல் மாஸ் வீடியோ!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss ganesh wife actress nisha lost her grandma

People looking for online information on Biggbosstamil, Ganesh Venkatram, Nisha will find this news story useful.