விஜய் டிவி சீரியல், அப்பா உள்ளிட்ட படங்கள் நடித்திருந்தவர் நடிகை கேப்ரியால்லா.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றினார். அதன் பின்னர் இன்னும் பிரபலமான கேப்ரியல்லா, மீண்டும் விஜய் டிவி பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெர்ஃபார்ம் செய்தார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ஈரமான ரோஜாவே சீரியலின் ப்ரோமோ அண்மையில் வெளியானது. இதில் ஒரு சூழ்நிலையால் காதலித்தவரின் அண்ணனை கேபி திருமணம் செய்துகொள்கிறார். இதனால் தன் அண்ணனை திருமணம் செய்துகொள்ள வேண்டிய மணமகளை கேபியின் காதலர் மணக்கிறார். இது இந்த சீரியலின் 2வது சீசன்.
இந்நிலையில்தான் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர், கேப்ரியல்லாவிடம், “திரையுலகத்தில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஏன் சீரியல் மாதிரியான சின்ன விசயத்தில் ஈடுபடுகிறீர்கள்?” என்று கேட்டுள்ளார். இதற்கு கேப்ரியல்லா, “இதை நான் சின்ன விசயமாக நினைக்கிறேன் என நீங்கள் கருதினால் நீங்கள் உங்களை பற்றியே ஜோக் பண்ணுகிறீர்கள் என அர்த்தம்.
சின்ன திரையோ, பெரிய திரையோ எல்லாமே ஒரு மீடியம் தான். ஒரு நடிகராக நாம் பணியில் எவ்வளவு சிரத்தையுடன் இருக்கிறோம் என்பதே விஷயம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரின் இல்லத்துக்கே நேரடியாக சென்று விசிட் செய்வது ஒன்றும் சின்ன விசயம் அல்ல” என்று பதில் கூறியுள்ளார்.
அதன் பிறகும் இன்னொரு ரசிகர், இதேபோன்ற ஒரு கேள்வியை கேட்டுள்ளார். இதற்கு கொந்தளித்த கேப்ரியல்லா, “இன்னொருவரும் இதே கேள்வியை கேட்டாலோ, இதுகுறித்து சிரித்தாலோ ... உங்க கிட்ட நான் கருத்து கேட்டேனா? இல்ல உங்க வேலையை பற்றி நான் கமெண்ட் பண்ணேனா? வாழ விடுங்க” என்று பேசியுள்ளார். இந்த இன்ஸ்டாகிராம் பதிவுகள் வைரலாகி வருகின்றன.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் பரபரப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடைசியாக அறிமுகப்படுத்தப்பட்ட பணப்பெட்டி டாஸ்க்கில் 12 லட்ச ரூபாய் பணத்துடன் மாஸ்டர் சிபி வெளியேறியுள்ளார். மேலும் இந்த வார எவிக்ஷன் யாராக இருக்க கூடும்? என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.