தனது குழந்தை சிரிக்கும் க்யூட்டான வீடியோவை பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்துள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக இருப்பவர் சுஜா வாருனி. இவர் பல படங்களில் பாடல்களில் நடனமாடி அசத்தினார். மேலும் கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் சுஜா வாருனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனின் க்யூட் வீடியோவை பகிர்ந்துள்ளார். அவரது மகன் சிரிக்கும் வீடியோவை பதிவிட்டுள்ள அவர், ''எனது மகன் சிரிக்கும் போது, மனது லேசாகி விடுகிறது' எனவும் குறிப்பிட்டுள்ளார்.. இவர் சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி தேவின் மனைவியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.