நடிகை சாக்ஷி அகர்வால், வனிதா - பீட்டர் பால் திருமணம் குறித்து பளீசென்று பேசியுள்ளார்.
மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளாவார் வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜய் ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தில் அறிமுகமானார். இதையடுத்து சில படங்களில் நடித்து வந்தவர், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள், யூடியூப் சேனல்கள் என பிசியாக வலம் வந்த வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை அண்மையில் மறுமனம் செய்து கொண்டார். இதையடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி, இதுகுறித்து புகாரிளிக்க, சமூக வலைதளங்களில் வனிதாவின் திருமணம் ஹாட் டாபிக் ஆனது.
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற நடிகையான சாக்ஷி அகர்வால் இதுகுறித்து மனம் திறந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ''பிக்பாஸ் போட்டிக்கு பிறகு நான் யாரிடமும் பெரிதாக டச்சில் இல்லை. வனிதா சுயமாக யோசிக்க கூடிய, தைரியமான பெண், அவர் பல கஷ்டங்களை பார்த்துள்ளார். இந்த விஷயத்தில் அவர் பீட்டர் பாலை பற்றி தெரியாமல் ஏமாந்துவிட்டார் என்று சொல்வதை ஏற்க முடியாது. அவர் ஒன்றும் இரண்டாவது படிக்கும் குழந்தை அல்ல. இந்த விஷயத்தை பற்றி ட்விட்டரில், ஃபேஸ்புக்கில் யாரும் பேசாமல் இருந்தாலே போதும், பிரச்சனை முடிஞ்சுடும்'' என பளீசென்று தெரிவித்தார் இந்த பிக்பாஸ் நடிகை.
மேலும் டிக்டாக் உள்ளிட்ட சீன ஆப்கள் தடை செய்யப்பட்டது குறித்தும் தனது கருத்தை அவர் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய சாக்ஷி அகர்வாலின் முழு வீடியோ இதோ.