அன்னையர் தினத்தில் எங்க குழந்தை முதல் தடவை அம்மான்னு..! - பிக்பாஸ் நடிகர் மகிழ்ச்சி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற கணேஷ் வெங்கட்ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட்டான பதிவை வெளியிட்டுள்ளார். 

பிக்பாஸ் நடிகருக்கு மகள் கொடுத்த சர்ப்ரைஸ் | biggboss fame actor ganesh venkatram emotional post about his daughter

பிரகாஷ்ராஜ், திரிஷா நடிப்பில் வெளியான அபியும் நானும் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் கணேஷ் வெங்கட்ராம். இதையடுத்து இவர் கமலின் உன்னை போல் ஒருவன் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் தீயா வேலை செய்யனும் குமாரு, தனி ஒருவன் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய வேடங்களில் கலக்கிய இவர், பிக்பாஸ் போட்டியிலும் பங்கேற்றார். இவர் சின்னத்திரை ஆங்கரான நிஷாவை திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில் கணேஷ் வெங்கட்ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்யூட் பதிவை வெளியிட்டுள்ளார். அவரது மகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ''வாழ்வில் எதிர்ப்பாராத நிகழ்வுகள் ரொம்ப அழகானவை. அது ஒரு கவிதை மாதிரி. சரியாக அன்னையர் தினமான இன்று எங்கள் மகள் சமைரா முதல்முறையாக அம்மா என்று அழைத்திருக்கிறாள்' என அவர் தாய்மையின் சிறப்பை பாராட்டி பதிவிட்டுள்ளார். 

Entertainment sub editor

பிக்பாஸ் நடிகருக்கு மகள் கொடுத்த சர்ப்ரைஸ் | biggboss fame actor ganesh venkatram emotional post about his daughter

People looking for online information on BIGGBOSS TAMIL, Ganesh Venkatram, Nisha Ganesh will find this news story useful.