www.garudavega.com

‘ரசிகையின் திடீர் மறைவு’.. கண்களில் கண்ணீருடன் நடிகர் ஆரியின் உருக்கமான பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளம் நடிகர் ஆரி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களின் மூலம் தமது அழுத்தமான நடிப்பை பதிவு செய்தார். எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நேரடியாக தமிழக மக்களின் மனதில் நேரடியாக அமர்ந்தார்.

BiggBoss fame actor Aari emotional post over fan demise

தமக்கே உரிய இயல்பினாலும், சமூக அக்கறை தொண்டுகளாலும், முன்னெடுப்புகளாலும், அனைவருக்கும் பிடித்தமான இளம் நடிகராக மாறிப்போன ஆரிக்கு எண்ணற்ற ரசிகர்களின் பேரன்பும் பேராதரவும் உள்ள நிலையில் அவ்வப்போது ரசிகர்களை சந்திப்பதும், அவர்களுடன் சமூக வலைதளங்களின் மூலமாக அப்டேட்டில் இருப்பதும் ஆரியின் வழக்கம்.

இந்நிலையில் தமது ரசிகையாக இருந்த ஒரு சிறிய குழந்தை ருத்ரா மறைவடைந்ததை அடுத்து, எமோஷனல் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பான தமது பதிவில், “குழந்தை ருத்ராவின் அன்பு எனக்கு கிடைத்த வரம். குழந்தையின் மறைவு செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். அவர்களது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உன் சுவாசம் நின்று விட்டாலும், என் சுவாசம் உள்ளவரை நினைவில் கொள்வேன்” என குறிப்பிட்டுள்ளார்.

‘ரசிகையின் திடீர் மறைவு’.. கண்களில் கண்ணீருடன் நடிகர் ஆரியின் உருக்கமான பதிவு! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss fame actor Aari emotional post over fan demise

People looking for online information on Aari, Biggboss, Emotional, Heartmelt will find this news story useful.