தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. போட்டியில் வெல்லப்போவது யார்? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ள நிலையில் பலரும் இதுபற்றி சமூக வலை தளங்களில் விவாதித்தும் வருகின்றனர்.
Also Read | ஜெயிலர் படத்தில் நடிப்பது குறித்து முதல்முறையாக மனம் திறந்த தமன்னா 😍.. வைரல் பதிவு!
வீட்டுக்குள் அறிமுகப்படுத்தப்பட்ட பண மூட்டையுடன் வெளியேறுவதாக அறிவித்து கதிர் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தார். 3 லட்ச ரூபாயுடன் அவர் வெளியேற, தற்போது பணப்பெட்டி வீட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. பணப்பெட்டியை யாராவது எடுப்பார்களா? அல்லது தொடர்வார்களா? என ரசிகர்கள் சமூக வலை தளங்களில் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கின்றனர்.
பணப்பெட்டியில் இதுவரையில் 10 லட்ச ரூபாய் சேர்ந்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் போட்டியாளர்கள் இதுபற்றி அவ்வப்போது வீட்டுக்குள் பேசி வருகின்றனர். இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் இன்னும் நட்பாக இருந்திருக்கலாம் என நினைக்கும் நபருக்கு கையில் சிவப்பு வண்ண பட்டை ஒன்றை கட்டுமாறு டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் போட்டியாளர்கள் நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தனர். இதை தொடர்ந்து விக்ரமன் தனது குடும்பத்தினர் பற்றி உருக்கமாக பேசி இருந்தார்.
இந்த சூழ்நிலையில் போட்டியில் இறுதிவரை வந்திருக்கும் அசீம், விக்ரமன், மைனா, ஷிவின் மற்றும் அமுதவாணன் ஆகியோருக்கு பிக்பாஸ் ஒரு சர்ப்ரைஸ் ஒன்றையும் அளித்து வருகிறார். வீட்டினுள் இந்த போட்டியாளர்களின் பிக்பாஸ் அனுபவங்களை காட்சிப்படுத்தும் வகையில் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றிய காணொளியும் திரையிடப்படுகிறது. இதனையடுத்து பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகிறார். முன்னதாக அமுது, ஷிவின் மற்றும் மைனா ஆகியோர் தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பொருட்களை ஆச்சர்யத்துடன் பார்வையிட்டிருந்தனர்.
இந்நிலையில், புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் இந்த முறை அசீம் தனக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சர்ப்ரைஸ் நிகழ்வில் கலந்துகொள்கிறார். அப்போது பேசும் பிக்பாஸ்,"இந்த மொத்த வீடும் எதிர்த்து நின்ற போதும், துளிகூட பயப்படாமல் இந்த பிக்பாஸ் போட்டியை முழுமையாக விளையாடி மாக்கள் மனதை வென்றிருக்கிறீர்கள். மனதில் நிறைய சோகம் இருந்தால் வெளியில் நிறைய கோபம் இருக்கும் என்பார்கள். அந்த சோகங்கள் எல்லாம் தீர்ந்து ஒரு வாழ்க்கையை நோக்கி பயணிக்க வாழ்த்துக்கள்" என்கிறார்.
இதனை கண்கலங்கியபடி கேட்டுக்கொண்டிருக்கும் அசீம், பின்னர் உணர்ச்சிப்பெருக்குடன் பிக்பாஸுக்கு நன்றி சொல்கிறார்.
#Day103 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/rxFF9uqmXE
— Vijay Television (@vijaytelevision) January 20, 2023
Also Read | குடும்பத்துடன் இலங்கையில் இன்பச் சுற்றுலா... சரத்குமார் & வரலெட்சுமி பகிர்ந்த சூப்பர் PHOTOS!