பிக்பாஸ் வீட்டுக்குள் அக்ஷரா ஆவேசமாக கத்திய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது அனைவரும் பள்ளி காலங்களை நினைவுபடுத்தும் கனா காணும் காலங்கள் டாஸ்கில் ஈடுபட்டுள்ளனர். இதற்கென அனைவரும் பள்ளி குழந்தைகளின் சீருடையில் வலம் வருகின்றனர். இதேபோல் ராஜூ, அபிஷேக், புதிதாக பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்திருக்கும் அமீர் உள்ளிட்ட போட்டியாளர்கள் ஆசிரியர்களாக வலம் வருகின்றனர்.
நடிகர் சிபி, பிக்பாஸ் போர்டிங் பள்ளியின் வார்டனாக வலம் வருகிறார். மிகவும் ஸ்டிரிக்டாக நடந்து கொள்ளும் சிபி, மாணவர்களாக இருக்கும் மற்ற போட்டியாளர்களை விதிகளை பின்பற்ற சொல்லி கொஞ்சம் கடினமாகவே அறிவுறுத்துகிறார். அவ்வாறு விதிகளை பின்பற்றாத, அதாவது அடங்காத, சேட்டை செய்யும் மாணவர்களுக்கு சிபி தண்டனை கொடுத்து வருகிறார்.
முன்னதாக பிரியங்கா ஆங்கிலத்தில் பாடுவது, விதிகளை பிரேக் செய்வது என இஷ்டத்துக்கு இருக்க அதற்கு சிபி பிரியங்காவை வெளியே அனுப்பி தண்டனை கொடுத்தார். இதனால் பிரியங்கா பிக்பாஸ் பள்ளியின் வெளியில் இருக்கும் சோபாவில் படுத்துக் கொண்டார்.
இந்த நிலையில் சிபியின் கவனம் அக்ஷரா பக்கம் திரும்பியது. அக்ஷரா சொன்ன நேரத்துக்கு போர்டிங் பள்ளியின் நிகழ்வில் கலந்து கொள்ளாததால், சிபி அவரை கேள்வி கேட்க, அக்ஷராவும் தன் வேலைகளை செய்துவிட்டு வருவதாக குறிப்பிட, எதுவாக இருந்தாலும் சீக்கிரம் செய்துவிட்டு வரவேண்டும் என்று சிபி எச்சரிக்கிறார்.
அதற்கு டென்ஷனான அக்ஷரா, ஆவேசமாக கத்த தொடங்கி விடுகிறார். ஓவராக பண்ணுகிறார்கள் என்று டிரெஸ்ஸிங் ரூமில் சென்று அக்ஷரா புலம்புகிறார். அப்போது அங்கு அவரிடம் பேச வரும் ராஜூவிடம், “நீ பேசாத!” என்று அக்ஷரா சொல்லிவிடுகிறார். அப்போது அங்கு சிபியும் வர, அவரிடமும், “கடுப்பாகிடுவேன்.. நீ பேசாத.. என் கண் முன்ன நிக்காத.. போய்டு!” என்று சொல்கிறார்.
இதனை தொடர்ந்து அக்ஷராவை நேரில் சந்தித்து பேசும் சிபி, “இது இப்படித்தான் இருக்கும்.. நீ இதை இப்படி எடுத்துக் கொண்டால் ஒன்னும் செய்ய முடியாது! நான் செய்வதை, என் பாணியில் நான் தொடர்ந்து செய்வேன்!” என்று காட்டமாக கூறுவிட்டு சென்றுவிடுகிறார். ஆனாலும் கோபமாக வலம்வஎத அக்ஷராவை பிக்பாஸ் கன்ஃபெஷன் ரூமுக்கு அழைக்கிறார்.
பிக்பாஸ் அக்ஷராவை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து ஆறுதல் சொல்லப் போகிறாரா? அல்லது கண்டிக்க போகிறாரா? அல்லது தண்டனைகள் ஏதேனும் தரப்போகிறாரா? என்பது குறித்த விவரங்கள் எபிசொடில் தான் தெரியவரும். ஒருவேளை தண்டனைகள் கடுமையானால் ரெட் கார்டு கொடுக்கப்படவும் வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
சிபிக்கும் அக்ஷராவுக்குமான இந்த வாய்ச்சண்டையும், முரணும் புதிதல்ல. முன்னதாக பால் பண்ணையில் பால் சேகரிக்கும் செண்பகமே செண்பகமே டாஸ்க், அதன் பின்னர் பொம்மை டாஸ்க் என பல இடங்களில் அக்ஷரா - சிபி இருவருக்குமிடையேயான வாக்குவாதங்கள் அனல் பறக்கும் வாதங்களாகவே இருந்தன. அவை அத்தனையிலும் சிபி கோபமாகவும், அக்ஷரா ஆவேசமாகவும் பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.