Reliable Software
www.garudavega.com

பிரபல விஜய் டிவி சீரியலில் இணைந்த பிக்பாஸ் அர்ச்சனா... வெளியான ஸ்பெஷல் புரோமோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி என்றாலே சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு தான் பிரசித்தம். பல நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. அப்படி நடிகை ஆல்யா மானசா மற்றும் அவரது கணவர் சஞ்சீவ் இணைந்து நடித்த நாடகம் ராஜா ராணி. அந்த சீரியல் வெற்றி பெற்றதையடுத்து அதே பெயரில் இரண்டாம் பாகம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகை ஆல்யா மானசா உடன் கலர்ஸ் சேனலில் திருமணம் சீரியல் மூலம் பிரபலமடைந்த சித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும் தற்போது விறுவிறுப்பான காட்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது ராஜா ராணி 2. அதே போல் இதன் ஒளிபரப்பு நேரமும் ஒரு மணி நேரமாக அதிகரித்துள்ளது.

biggboss archana joins in popualr vijay tv serial சீரியலில் இணைந்த பிக்பாஸ் அர்ச்சனா

இந்த சீரியல் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற "என் கணவன் என் தோழன்" என்ற சீரியலின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இதில் சரவணன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்து. நடிகர் சித்து கலர்ஸ் தமிழ் திருமணம் சீரியலில் நடிகை ஸ்ரேயா அஞ்சன் என்பவருடன் நடித்து வந்தார். அந்த சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது ராஜா ராணி 2 சீரியலில்  வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அர்ச்சனா முதன்முறையாக விஜய் டிவியில் ஒளிபரப்பான 'காதலே காதலே' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த செய்தி மிகவும் வைரலானது. அதன் பிறகு சில சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் தற்போது ராஜா ராணி சீரியல் மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் இணையும் மகாசங்கமம் நடைபெற்று வருகிறது. இந்த சீரியலின் ஒரு பகுதியாக அர்ச்சனா இந்த சீரியலில் இடம் பெற்றுள்ளார். இந்த புரோமோவை விஜய்டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.

 

biggboss archana joins in popualr vijay tv serial சீரியலில் இணைந்த பிக்பாஸ் அர்ச்சனா

பிரபல விஜய் டிவி சீரியலில் இணைந்த பிக்பாஸ் அர்ச்சனா... வெளியான ஸ்பெஷல் புரோமோ..! வீடியோ

Tags : Archana

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss archana joins in popualr vijay tv serial சீரியலில் இணைந்த பிக்பாஸ் அர்ச்சனா

People looking for online information on Archana will find this news story useful.