www.garudavega.com

பங்கமாய் கலாய்த்த பிக்பாஸ்!.. போற போக்கில் ‘சரி பெருசு’ என்று செஞ்சுவிட்ட பிரியங்கா!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள்ள அமர்ந்து பிரியங்கா செய்யும் அட்ராசிட்டிகளுக்கு அளவே இல்லை. பலருக்கும் அது பிடித்தமானதாக இருக்கிறது. அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் பிரியங்காவின் அட்ராசிட்டிக்கு பிக்பாஸ் கொடுத்த பதிலடி - திருப்பி பிக்பாஸை பிரியங்கா கலாய்த்தது என தரமான சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

biggboss alert Priyanka mick her reply to BB goes viral

ஆம், பிக்பாஸ் வீட்டில் கதை சொல்லும் டாஸ்க் நடந்துகொண்டிருக்கிறது. முன்னதாக இசைவாணி, தம்முடைய உருக்கமான கதையை சொன்னார். டாஸ்படி, இந்த கதைக்கு மற்ற ஹவுஸ்மேட்ஸ் தங்களுடைய லைக்ஸ் அல்லது டிஸ்லைக் உள்ளிட்டவற்றை அங்கு இருக்கும் மேக்னட்டிக் போர்டில் பொருத்திக் காட்ட வேண்டும்.

அதன்படி இசைவாணியின் கதையை கேட்டு அனைவருமே உருகிவிட்டனர். யாரும் அவருடைய கதைக்கு டிஸ்லைக் போடவில்லை. இதேபோல் பாடகி சின்னப் பொண்ணு கதை சொன்னார். சின்னப் பொண்ணு தன்னுடைய கிராமிய கலை பற்றியும், அந்த கிராமிய கலையில் தாங்கள் எவ்வாறு முன்னேறி வந்தோம், எவ்வளவு கஷ்டங்களை சந்தித்தோம் என்பது பற்றி மிக உருக்கமாகப் பேசி முடித்து விட்டு, இறுதியில் தன்னுடைய அம்மா பற்றிய ஒரு பாடலை பாடியிருந்தார்.

இதன் பின்னர் அனைவரும் சின்ன பொண்ணுவின் கதையை கேட்டு உருகிப் போய் இருந்தனர். அப்போது ராஜூ ஜெயமோகன், சின்னப் பொண்ணுவின் கதை சொன்ன விதத்துக்கு டிஸ்லைக் செய்திருந்தார். மேலும், “அந்த கதையின் எமோஷன், பாடலில் இருந்த அளவுக்கு இல்லை என்றும், சின்னப்பொண்ணுவின் பயணத்தை குறை சொல்லவில்லை; கதை சொன்ன விதத்தில்தான் - தேவையில்லாத காட்சிகள் திரைப்படத்தில் பார்ப்பதுபோல இருந்தது. அதே போல் படம் முழுவதும் மொக்கையாக இருந்து கிளைமாக்ஸ் நன்றாக இருந்தால், அது மட்டுமே மனதில் நிற்கும் என்பது போன்று, அவர் கதை சொல்லி முடித்த விதம் இருந்தது!” என்றும் ராஜ் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் வீட்டில் இயல்பாக அனைவரும் ஆங்காங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது, ராஜூ, சின்ன பொண்ணுவிடம் சென்று பேசிக் கொண்டிருக்கிறார். சின்ன பொண்ணு மெத்தையில் படுத்தபடி ஏதோ பேசிக் கொண்டிருக்க, தூரத்திலிருந்து அதைப் பார்த்த பிரியங்கா தன்னுடைய அருகில் ஆகியோரை வைத்துக்கொண்டு, தூரத்திலிருந்து ராஜூ - சின்ன பொண்ணு உரையாடலை டப்பிங் செய்து காட்டி காமெடி செய்து கொண்டிருந்தார்.

குறிப்பாக, “சின்ன பொண்ணுவுக்கு டிஸ்லைக் கொடுத்த ராஜூ, அந்த அக்காவுடன் இப்போது ஃப்ரண்ட் ஆக முயற்சி செய்து கொண்டிருக்கிறான்” என்று பிரியங்கா நகைச்சுவையாக கூறியதுடன், அவர்கள் இருவரும் பேசுவதை கொஞ்சம் டப்பிங் செய்தும் காட்டினார்.

கடைசியாக பிக்பாஸ்.. “பிரியங்கா..” என்று அழைக்க, ஒரு செகண்ட் அனைவரும் பயந்து விட்டனர். அப்போது பிக்பாஸ், “பிரியங்கா மைக்கை சரியாக மாட்டுங்கள்!” என்று சொல்ல, பிரியங்கா அதற்கு ஜர்க் ஆகி, “ஓகே பெருசு!!” என்று ரிப்ளை செய்து பிக்பாஸையே கலாய்க்கிறார். உடனே அரங்கம் அதிர அனைவரும் வெடித்து சிரிக்கின்றனர்.

biggboss alert Priyanka mick her reply to BB goes viral

முன்னதாக பிரியங்கா பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபடியே தன்னுடைய நண்பிகள் அனைவருடனும் உட்கார்ந்து கொண்டு கோரஸாக ‘நோ’ என்று அழுது கொண்டும், சிரித்துக் கொண்டும், கோபமாகவும் சொல்வது போன்று ஒரு சேட்டையை செய்திருந்தார்.

அப்போது அழுதுகொண்டே, “பிக்பாஸ் பாக்காதீங்க நோ” என்று கூறினார். அதற்கு நதியா, “இதுக்கு பிக்பாஸ் நோ என்று சொல்லிவிடுவார்!” என்று கவுண்ட்டர் கொடுத்திருந்தார்.

biggboss alert Priyanka mick her reply to BB goes viral

இப்படி பிக்பாஸ் வீட்டில் கலகலப்பாகவும் குறும்புத்தனமும் கொண்டு பிரியங்கா இருப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்ததுதான். பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா இருப்பது என்பது அந்த சூழலை இன்னும் கலகலப்பாக மாற்றுகிறது என்பதால் பலருக்கும் இப்போதைக்கு ஒரு ரிலாக்ஸ் ஃபீலிங் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "பிக்பாஸ் வீட்டில் வெடித்தது பிரச்சனை!!".. ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கய்யா.. கதறும் ரசிகர்கள்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss alert Priyanka mick her reply to BB goes viral

People looking for online information on Abhinav, Akshara Reddy, அபிஷேக், இமான் அண்ணாச்சி, பிக்பாஸ், பிரியங்கா, விஜய் டிவி BBTamilSeason5, Biggboss abishek, Biggbosstamil, BiggBossTamil5, Chinnaponnu, GrandLaunch, Ikky Berry, ImmanAnnachi, Isaivani, Kamalhassan, Master Cibi, Pavani Reddy, Raju, Thamarai Selvi, Varun, VijayTelevision, VJ Priyanka will find this news story useful.