உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. அதன் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. மனஅழுத்தமான இந்த சூழ்நிலையிலும் மக்கள் தங்களை இயல்புடன் வைத்துக் கொள்ள பல முயற்சிகளை செய்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் மிகவும் டிரெண்ட் ஆகி கொண்டிருப்பது FACEAPP எனும் செயலி.
இதன் மூலம் ஆண்கள் பலரும் தங்களை பெண் உருவத்தில் மாற்றியும், பெண்கள் தங்களை ஆண் உருவத்தில் மாற்றியும் புகைப்படம் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் காமெடி நடிகை ஆர்த்தி ஒரு ஆணின் போட்டோவை வெளியிட்டு ""இவர் தான் என் புது காதலர், இவரைத் தான் திருமணம் செய்ய போகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்" என்று கணவர் பெயரை டேக் செய்தார். பலரும் குழம்பி போய் விட்டனர். பின்பு தான் தெரிந்தது இது Faceapp-ல் மாற்றிய அவருடைய ஆண் உருவ புகைப்படம். அதனை அவர் வேடிக்கையாக பதிவிட்டுள்ளார்.
My new lover my cute my darling I'm going to marry him.... Sorry @km_ganeshkar pic.twitter.com/gvHIfoSnwD
— Actress Harathi (@harathi_hahaha) June 21, 2020