பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட பிரபல நடிகை தனது ட்விட்டர் பதிவில் வெளிப்படையான கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கி வருபவர் ஓவியா. களவானி, கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நடித்து இவர் ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு பிரபலமானார்.
இந்நிலையில் தற்போது ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். ''இப்போதெல்லாம் பிரம்மாண்டத்தின் மாயையை கண்டு, பலர் அவதிப்படுவதை என்னால் பார்க்க முடிகிறது. அவர்கள் மீது அன்பும் அக்கறையும் காட்டுங்கள். மன வலிமைக்கே முன்னுரிமை கொடுங்கள்'' என அவர் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயத்தை பற்றிதான் நடிகை பேசுகிறார் என முனுமுனுக்கின்றனர் நெட்டிசன்கள்.
I'm seeing many ppl are suffering from grandiose delusion syndrome these days.. pls take care of them with love cand care!!make your mental health a priority.🤗❤
— Oviyaa (@OviyaaSweetz) August 14, 2020