www.garudavega.com

"இது எனக்கே தெரியாதே? இன்னும் எதாச்சும் இருக்கா?".. பிக்பாஸ் நடிகையின் சகோதரர் வைரல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ஜோக்கர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். பின்னர் இயக்குநர் தாமிராவின் இயக்கத்தில் ஆண் தேவதை படத்தில் நடித்திருந்தார்.

BiggBoss actress brother denies rumours cast as hero in new film

இயக்குநர் தாமிராவின் மறைவுக்கு ரம்யா பாண்டியன் உருக்கமான இன்ஸ்டாகிராம் போஸ்டையும் தற்போது வெளியிட்டிருந்தார். முன்னதாக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் தமிழ் மக்களிடையே பிரபலமானார்.  106 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த நடிகை ரம்யா பாண்டியன், இயல்பான தமிழை பேசி எப்போதும் சிரித்த முகமாய் காணப்படுபவர். பின்னர் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கூட சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

BiggBoss actress brother denies rumours cast as hero in new film

ரம்யா பாண்டியனுக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவர் தான் பரசு பாண்டியன். ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு பாண்டியன் புதிய படத்தில் ஹீரோவாக நடிப்பதாக சில ஊடகங்களில் வெளியான தகவல்களை மறுத்துள்ளார். அத்துடன், “அந்த தகவல் பரசுவுக்கே தெரியாது.. இன்னும் வேற என்னென்னலாம் பா தகவல்கள் வெச்சிருக்கீங்க!” என்றும் தமது சமூக வலைப்பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.  

இதனிடையே சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட்  தயாரிப்பில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் ரம்யா பாண்டியன் நடிக்கிறார் என்றும், இப்படத்தை புதுமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்குகிறார் என்றும் இப்படத்தின் இசையமைப்பாளரும் பாடகருமான க்ருஷ் தகவல் வெளியிட்டுள்ளார்.

ALSO READ: "குடும்பத்துல ஒருத்தர் மாதிரி நடத்தினார்!".. இயக்குநர் மறைவு.. ரம்யா பாண்டியன் உருக்கம்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss actress brother denies rumours cast as hero in new film

People looking for online information on Parasu Pandiyan, Ramya Pandian will find this news story useful.