பிக்பாஸ் வீட்டில் திடீரென அசீம் கண் கலங்கியது தொடர்பான ப்ரோமோ, தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது.
Also Read | இங்கிலாந்து நாட்டின் உலகப்புகழ் பெற்ற நகரில் பிரியங்கா மோகன்.. வீதி உலா வரும் வைரல் PHOTOS!
சமீபத்தில் தமிழில் பிக்பாஸ் 6 ஆவது சீசன் ஆரம்பமாகி இருந்தது. இதன் தொடக்கத்தில் போட்டியாளர்கள் ஜாலியாக நிகழ்ச்சியில் பங்கெடுக்கவே, அடுத்தடுத்த நாட்களில் டாஸ்க்குகள் மூலம் பிக்பாஸ் வீடு சூடு பிடிக்க தொடங்கி விட்டது.
இதன் காரணமாக, யாரும் எதிர்பாராத வகையிலான சம்பவங்களும் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. இதனால், பார்வையாளர்களும் இந்த நிகழ்ச்சியை விறுவிறுப்புடன் கண்டு களித்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் குறித்த கருத்துக்கள் கூட இதனால் எப்போதும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரத்திற்கு பின்னர், புதிய போட்டியாளராக மைனா நந்தினி களமிறங்கி உள்ளார். இதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டின் புதிய கேப்டனாகவும் ஜிபி முத்து டாஸ்க்கில் வெற்றி பெற்று தேர்வாகி உள்ளார்.
அது மட்டுமில்லாமல், அடுத்தடுத்து நாமினேஷன் உள்ளிட்ட டாஸ்க்குகளும் இடம்பெற்று வருவதால், இந்த வாரமும் முழுக்க முழுக்க பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பு கலந்து தான் இருக்கும் என்றும் தெரிகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், புதிய டாஸ்க்கின் போது அசீம் கண் கலங்குகிறார்.
இந்த வார டாஸ்க்கில் குறிப்பிட்ட நேரத்திற்குள் கதையை முடிக்க வேண்டும் என தெரிகிறது. மேலும், அப்படி முடிப்பவர்கள் அடுத்த வார நாமினேஷனில் இருந்து விடுபடுவார்கள் என்றும் ப்ரோமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில், உள்ளே சென்று அசீம் பேச ஆரம்பிக்கிறார்.
"நான் சினிமாவில் இருக்கிறேன் என தெரிந்து தான் என்னை கல்யாணம் செய்து கொண்டார்கள். திடீரென வந்த Misunderstanding. அதன் முன்பு எனது குழந்தை முக்கியம் என எனக்கு பட்டது" என கூறும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றிருக்க, அவரது வாய்ப்பு முடிந்து விட்டதாக பிக்பாஸ் தெரிவிக்க அங்கிருந்து அசீமும் வெளியேறுகிறார். இதற்கிடையில், திடீரென அசீம் கண்ணீர் விடவும் தொடங்க இந்த ப்ரோமோ பிக்பாஸ் ரசிகர்களையும் உருக வைத்துள்ளது.
எப்போதும் மற்றவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண அறிவுரை சொல்லும் அசீம், திடீரென கண் கலங்கி போனதால், இதுகுறித்து பார்வையாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read | "BB6 Tamil : தலைவருக்கு வெக்கத்த பாரு".. மனைவி பத்தி பேசுறப்போ 'Feel' பண்ணிய ஜிபி முத்து!!