Sanjeevan M Logo Top
www.garudavega.com

BIGGBOSS 6 TAMIL : "நீ பாத்தியா?" மாறி மாறி கை ஓங்கிய ஆயிஷா, தனலட்சுமி.. கடைசி'ல ஜனனி கொடுத்த THUG LIFE!!..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி உள்ள நிலையில் ஒவ்வொரு தினமும் மிக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

biggboss 6 tamil ayesha and dhanalakshmi fight janani reacts

Also Read | GP Muthu : "எனக்கு 41 வயசு ஆகுது.. தனலட்சுமி கால்ல விழுறேன்" .. ஜனனியிடம் மனம் திறந்த ஜிபி முத்து

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசன்களாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும். இந்த முறை, பிக்பாஸ் 6 வது சீசன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

biggboss 6 tamil ayesha and dhanalakshmi fight janani reacts

இதனால் தொடர்ந்து பிக்பாஸ் குறித்த விஷயங்கள், இணையத்தில் எப்போதுமே ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. இதனிடையே, ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி ஆகியோரிடையே நடந்த சண்டை தான், இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பரபரப்பான விஷயமாக மாறி இருந்தது.

பாத்திரம் கழுவும் அணியில் இடம்பெற்றுள்ள ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி ஆகியோர் இடையே மோதல் உருவாக, வீட்டில் உள்ளவர்கள் இருவருக்கும் இடையே சமரசம் செய்து வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இதன் பின்னர், தான் நடித்ததாக தனலட்சுமி குறிப்பிட்டதை எண்ணி கண்ணீர் வடிக்கவும் செய்தார் ஜிபி முத்து.

biggboss 6 tamil ayesha and dhanalakshmi fight janani reacts

அப்படி ஒரு சூழ்நிலையில், தனலட்சுமி மற்றும் ஆயிஷா ஆகியோர் சண்டை போடுவது போன்ற ஒரு ப்ரோமோ வெளியாகி, அதன் இறுதியில் உண்மை என்ன என்பதும் தெரிய வந்துள்ளது.

தனலட்சுமியிடம் கோபமாக பேசும் ஆயிஷா, பாத்திரம் கழுவாமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கத்திய படி கேட்கிறார். இதனைக் கண்டதும் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் மத்தியில் ஒரு வித பரபரப்பும் உருவானது. பதிலுக்கு ஆயிஷாவிடம், தனலட்சுமியும் நான் காலையில் இருந்தே பாத்திரம் கழுவி கொண்டு தான் இருக்கிறேன் என கூறுகிறார்.

biggboss 6 tamil ayesha and dhanalakshmi fight janani reacts

இருவருக்கும் இடையே உருவான வாய்த் தகராறு, அடுத்த கணமே கை நீட்டும் அளவுக்கும் செல்கிறது. ஆயிஷா மற்றும் தனலட்சுமி ஆகியோர் ஒருவரை ஒருவர் தள்ளி விட, அங்கிருக்கும் போட்டியாளர்களும் ஒரு நிமிடம் அதிர்ந்து போயினர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் அருகே சண்டையை நிறுத்த வந்த ஜனனி செய்த விஷயம் தான், செம ட்விஸ்ட்டாக மாறியது.

சண்டை போடும் நேரத்தில் அவர்கள் அருகே சென்ற ஜனனி, "நடிக்கிறீர்கள் என்பது தெரியுது. கொஞ்சம் அங்க போய் நடிங்க" என கூறுகிறார். அடுத்த நொடியே சண்டை போட்ட ஆயிஷா மற்றும் தனலட்சுமி ஆகியோர் சிரிக்க தொடங்க பின்னர் தான் இது Prank என்பது தெரிய வருகிறது.

ஆரம்பத்தில் பரபரத்த சக போட்டியாளர்கள், விளையாட்டுக்கு அவர்கள் செய்தது என தெரிந்ததும் தலையில் கைவைத்துக் கொண்டார்கள்.

Also Read | Biggboss 6 Tamil : தனலட்சுமி கூட பஞ்சாயத்து.. கண்ணீர் விட்டு கதறி அழுத ஜிபி முத்து.. எப்டி இருந்த மனுஷன்!!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss 6 tamil ayesha and dhanalakshmi fight janani reacts

People looking for online information on Ayesha, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, Dhanalakshmi, Janani, Vijay tv will find this news story useful.