www.garudavega.com

யாராலுமே சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியல.. கோர்ட் டாஸ்க்கில் நடந்த FUN சம்பவம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

BiggBoss 6 All Contestants laughing while Azeem case inquiry

Also Read | "பழம், தயிரை எல்லாம் அவரே எடுத்து சாப்பிடுறாரு".. நூதன கேஸுடன் வந்த தனலட்சுமி.. இவரு மேல தானா..?

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் நிவாஷினி வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

BiggBoss 6 All Contestants laughing while Azeem case inquiry

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டினுள் கோர்ட் டாஸ்க் துவங்கி இருக்கிறது. இதன்படி, பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நீதிமன்றம் என்ற பெயரில் இந்த டாஸ்க் ஆரம்பமாகும் நிலையில், ஒவ்வொருவராக தங்களது வழக்கு என்ன என்பதை மெயின் டோர் கேமரா முன்பு பதிவு செய்யலாம். இதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

BiggBoss 6 All Contestants laughing while Azeem case inquiry

இந்த டாஸ்க்கின்படி பலரும் தங்களுக்கு சரியில்லை எனத் தோன்றும் விஷயங்கள் குறித்து வழக்கு தொடுக்க, அதற்கான விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனலட்சுமி அசீம் மீது புதிய வழக்கு ஒன்றை தொடுத்திருக்கிறார். அதில், அசீம் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் பழங்களை தானே எடுத்து சாப்பிட்டு விடுவதாகவும் அதனை விசாரிக்கும்படியும் கூறியிருந்தார். இந்நிலையில், பிக்பாஸ் அன்சீன் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் தனலட்சுமி தொடுத்த வழக்கில் மைனா நந்தினி நீதிபதியாக செயல்படுகிறார். அசீமுக்காக ஜனனி வாதாடுகிறார். அப்போது, தனலட்சுமிக்காக ஆஜராகும் கதிரவன்,"இரவு நேரத்தில் பழங்கள், தயிர் போன்றவற்றை எடுத்து சாப்பிட்டு விடுகிறார். மற்றவர்களுடையதையும் எடுத்து சாப்பிடுறாரு, அதுதான் இங்க கேஸ்" என்கிறார். இதை கேட்டு நீதிபதியாக இருக்கும் மைனா உட்பட பலரும் சிரித்துவிடுகின்றனர்.

BiggBoss 6 All Contestants laughing while Azeem case inquiry

தொடர்ந்து, அசீமுக்காக ஜனனி வாதாடுகிறார். அப்போது,"அப்படி என்ன தவறு செய்துவிட்டார் என் கட்சிக்காரர்?" எனச் சொன்னதும் அசீமே சிரித்துவிடுகிறார். தொடர்ந்து,"பழங்கள் வீணாக போய்விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் மட்டுமே அவர் அப்படி செய்தார்" என்கிறார். இதைக்கேட்டு மொத்த நீதிமன்றமும் கலகலத்துபோகிறது.

Also Read | "நான் அப்படி சொல்லவே இல்ல.. ஆனா நீங்க..".. ஜனனி - விக்ரமன் இடையே நடந்த வாக்குவாதம்.. Biggboss6

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss 6 All Contestants laughing while Azeem case inquiry

People looking for online information on Azeem, Bigg Boss 6 Court Task, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Myna Nandhini, Vijay Television, Vijay tv will find this news story useful.