பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன தான் கலகலப்பாக போட்டியாளர்கள் இருந்து வந்தாலும் டாஸ்க் என வந்து விட்டால் வீடே ரெண்டாகி விடுவது போல பிரச்சனைகளும் புதிது புதிதாக உருவாகிறது.
Also Read | 3D-யில் உருவாகும் கைதி படத்தின் இந்தி ரீமேக்.. அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான மிரட்டலான டீசர்!
அந்த வகையில், கோர்ட் டாஸ்க் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து சில பரபரப்பு சம்பவங்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறி வருகிறது.
முன்னதாக பொம்மை டாஸ்க் மற்றும் ஃபேக்டரி டாஸ்க் இடையே பல குழப்பங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறி இருந்தது. இதன் பெயரில் அடுத்தடுத்து பல போட்டியாளர்கள் இடையே கூட சண்டை வெடித்து கலவரத்தையே பிக்பாஸ் வீட்டிற்குள் உருவாக்கி விட்டது. இதே போல தான் சமீபத்தில் நடந்து முடிந்த ராஜா ராணி டாஸ்க் இடையே கூட அசீம் மற்றும் விக்ரமன் மோதிக் கொண்டது உள்ளிட்ட பல சலசலப்பு சம்பவங்கள் நடந்திருந்தது.
டாஸ்க் என்று வந்து விட்டால் பிக்பாஸ் வீட்டிற்குள் தீப்பறக்கும் அதே வேளையில், சில போட்டியாளர்களும் வார இறுதியில் வெளியேறி இருந்தனர். ஜிபி முத்து தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என அங்கிருந்து இரண்டாவது வாரம் கிளம்பி விட்டார். இதற்கடுத்து, சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து அடுத்தடுத்து வெளியேறி இருந்தனர்.
நிவாஷினி வெளியேறியதை தொடர்ந்து, சமீபத்தில் நடந்த நாமினேஷன் இந்த சீசனின் முதல் Open நாமினேஷனாக இருந்தது. சக போட்டியாளர்கள் மத்தியில் தாங்கள் எலிமினேஷன் சுற்றுக்கு நாமினேட் செய்யும் 2 போட்டியாளர்கள் பெயரை அறிவிக்க வேண்டும். இதில் அசீம் மற்றும் தனலட்சுமி ஆகியோர் ஒருவரை ஒருவர் நாமினேட் செய்ததுடன் அதற்கு அவர்கள் சொன்ன காரணங்களும் அதிகம் வைரலாகி இருந்தது.
இந்த நிலையில், தற்போது ஆரம்பித்துள்ள கோர்ட் டாஸ்க்கில் அடுத்தடுத்து சில பிரச்சனைகளையும் ஆரம்பித்து வைத்துள்ளது.
புதிய டாஸ்க்கின் படி, பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நீதிமன்றம் என்ற பெயரில் இந்த டாஸ்க் ஆரம்பமாகும் நிலையில், ஒவ்வொருவராக தங்களது வழக்கு என்ன என்பதை மெயின் டோர் கேமரா முன்பு பதிவு செய்கிறார்கள். இதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்படுகிறது.
முன்னதாக கடந்த வார இறுதியில் கமல்ஹாசன் வந்த போது பிக்பாஸ் வீட்டிற்குள் வில் - அம்பாக யார் செயல்படுகிறார்கள் என கேட்டதற்கு அமுதவாணன் வில்லாகவும் அவர் தொடுக்கும் அம்பாக ஜனனியும் செயல்படுவதாக விக்ரமன் குறிப்பிட்டிருந்தார். அதே போல, கடந்த வார ராஜா ராணி டாஸ்க்கில் இளவரசியாகவும் ஜனனி இருந்தார். விக்ரமன் குறிப்பிட்டது குறித்து நீதிமன்ற டாஸ்க்கில் அவர் மீது புகார் எழுந்ததாகவும் தெரிகிறது. தொடர்ந்து, அமுதவாணனை வில்லாகவும், ஜனனியை அம்பாகவும் செயல்படுவதை எதன் சாட்சிக் கூறாக வைத்து சொல்கிறீர்கள் என அமுதவாணனுக்கு வழக்கறிஞராக இருக்கும் அசீம், விக்ரமனிடம் கேள்வி கேட்கிறார்.
இதற்கு விளக்கம் கொடுக்கும் விக்ரமன், "இளவரசியார் (ஜனனி) ராஜகுருவுக்கு அவமானம் நடக்கும் போது கூட எதுவும் கேட்கவில்லை. ஆனால், அமுதவாணனுக்கு ஒண்ணுமே நடக்கல" என கூறுகிறார். தன் மீதான குற்றச்சாட்டிற்கு விக்ரமன் சொல்லும் பதில் அடுத்தடுத்து பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் உருவாக்கலாம் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.
Also Read | ரஜினியின் பாபா பட ரிலீஸில் அனிருத்..? வைரலாகும் Throwback போஸ்டர்!