BiggBossTamil5: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களான ஐக்கி பெர்ரி மற்றும் தாமரை இருவரும் இன்ஸ்டாகிராமில் ஓ சொல்றியா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.
நாடக கலைஞர் தாமரை
ஐக்கி, தாமரை செல்வி ஆகிய இவர்கள் இருவருமே நடனக் கலைஞர்கள். பாடவும் செய்வார்கள். தாமரை செல்வி நாடகத்தில் நடிப்பதுடன் பாடவும் செய்வார். நாட்டுப்புற பாடல்களை பாடி, புராண நாடங்களை பண்ணும் தாமரை செல்வி, பிக்பாஸ் வீட்டில் தொடக்கத்தில் நடந்த நாடகத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
ராப் பாடகி ஐக்கி
இதேபோல் தஞ்சையை பூர்விகமாகக் கொண்ட ஐக்கி பெர்ரி, அனைவருடனும் ஐக்கியமாதல் எனும் பொருளில் தான் தனக்கு பெயர் வைக்கப்பட்டதாக தொடக்கத்தில் கூறியிருந்தார். இதேபோல், தன்னுடைய அப்பா கமல்ஹாசனின் பெரிய ரசிகர் என்று கூறியிருந்த ஐக்கி பெர்ரி, ஃபினாலேவில் அணிந்திருந்த தொப்பியை கமல்ஹான விசிறி போல் இருப்பதாக ஜாலியாக கூறியிருந்தார்.
ஃபினாலாவில் ஐக்கி பெர்ரி
அந்த அளவுக்கு ஐக்கி பெர்ரியின் தோற்றம் ஃபினாலாவில் அனைவராலும் கவனிக்கத்தக்க வண்ணம் இருந்தது. வண்ணமயமாகவும் இருந்தது. பாடிக்கொண்டே ஆடும் திறன் கொண்ட ஐக்கி பெர்ரி, சமூக கருத்துக்களையும் மோட்டிவேஷன் விசயங்களையும் ராப் அல்லது பாப் வகை பாடலாக பாடுவதில் வல்லவர். இவற்றுக்கான வரிகளை தானே எழுதிக்கொண்டு ஐக்கி பாடி வருகிறார்.
என்ன இவரு திடீர்னு ஒத்துகிட்டாரு? அப்ப சீரியல் முடியுதா? பாரதி கண்ணம்மா பரபர ட்விஸ்ட்!
ஓ சொல்றியா மாமா பாட்டுக்கு டான்ஸ்
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களான தாமரை மற்றும் ஐக்கி பெர்ரி இருவரும், ஓ சொல்றிய மாமா பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோவை ஐக்கி பெர்ரி தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
சேல சேல சேல கட்டுனா… தாமரை
இந்த வீடியோவில், ‘ஓ சொல்றியா மாமா’ என தொடங்கும் பாடல் வரிகளில், முதல் வரியான, “சேல சேல சேல கட்டுனா… குறு குறு குறுன்னு பாப்பாங்க…” என்கிற வரிகள் வரும்போது தாமரை செல்வி அழகாக புடவை கட்டியபடி வந்து நிற்கிறார்.
5 ஹீரோயின்ஸா?.. ‘அங்காடி தெரு’ மகேஷின் அடுத்த படம்.. ரொமாண்டிக் சைக்கோ த்ரில்லர்
குட்ட குட்ட கவுன போட்டா… ஐக்கி
இதேபோல், “குட்ட குட்ட கவுன போட்டா… குறுக்கா மறுக்கா பாப்பாங்க…” என்கிற வரிகள் வரும்போது ஐக்கி பெர்ரி ஒரு ஷார்ட் டிரெஸ்ஸூடன் கலக்குகிறார். இவர்கள் இருவரும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பேசுவதும், ஆக்டிவாக இருப்பதுமாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.