காலத்தை மீண்டும் திரும்ப பெற முடியாது என்று பெரிதாக நீட்டி முழக்கும்போதே தெரிந்து விட்டது. டாஸ்க் எப்படி இருக்குமென. போதாதற்கு ப்ரோமோவில் பயங்கரமாக அனைவரும் ஈடுபாடு காட்டியதை பார்த்து இருக்கு இன்னைக்கு எண்டெர்டெயிண்மெட் இருக்கு என உற்சாகமான ரசிகர்கள் அனைவரும், நிகழ்ச்சியை பார்த்து தயவுசெஞ்சு ஒரு மூணு நாள் லீவ் விட்ருங்க என கதற ஆரம்பித்து விட்டனர்.
அந்தளவு இந்த டாஸ்க் இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நிலையில் ரசிகர்கள் மணிக்கூண்டு அட்டவணையை வைத்து தற்போது மீம்ஸ் போட்டு வருகின்றனர். அட்டவணையில் காலை 7 மணிக்கு தண்ணீர் பிடிக்க வேண்டும் என சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் வேக்கப் சாங் காலையில் 8 மணிக்கு என இருக்கிறது. காலையில் பாட்டு போட்டால் தான் போட்டியாளர்கள் திருப்பள்ளி விட்டு எழுவார்கள்.
Follow 👉 @biggboss_cringe for more memes & trolls#BiggBossTamil4 #BB4Tamil #BiggBossTamil#BBTamilSeason4 pic.twitter.com/6H9BFGpbMR
— BB Tamil Cringes (@biggboss_cringe) November 17, 2020
நிலைமை அப்படியிருக்க காலையில் 7 மணிக்கு எப்படி எழுந்து தண்ணீர் பிடிப்பார்கள்? என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. வேறு சிலரோ நாளைக்கு காலையில பாக்கலாம். எல்லாரும் எத்தனை மணிக்கு எந்திரிக்கிறாங்கன்னு என காத்திருக்கின்றனர். மேலும் ஏன் பிக்பாஸ் டைம்டேபிள் போடும்போதே இதை எல்லாம் ஒழுங்கா பாக்க மாட்டீங்களா? உங்க கிரியேட்டிவ் டாஸ்க் போலவே இதுவும் உள்ளது என விதவிதமாக கலாய்த்து வருகின்றனர்.