விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 4 பெண்களிடம் Flirt செய்து கன்டென்ட் கொடுக்க முயன்ற கவினை தாறுமாறாக கேள்வி கேட்டு வாயடைக்கச் செய்துள்ளார் வைல்ட் கார்ட் எண்ட்ரி கஸ்தூரி.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அபிராமி, சாக்ஷி, லாஸ்லியா, ஷெரின் ஆகிய 4 பெண்களிடம் தனது மாமா பொண்ணுங்கக்கிட்ட பேசுவது போல் விளையாடுவதாக கூறி கன்டென்ட் கொடுத்த கவினுக்கு பின்னர் அதுவே பெரிய கண்டமாக மாறியது. அபிராமியின் விருப்பத்தை நிராகரித்த கவின் சாக்ஷியிடம் நெருக்கம் காட்டினார். இது நமக்கான Zone அல்ல என ஷெரின் விலக பிறகு லாஸ்லியாவிடம் பழகினார்.
கவின் லாஸ்லியாவிடம் நெருக்கமாக இருப்பதை விரும்பாத சாக்ஷி அவரிடம் Possessive ஆக சண்டை பிடிக்க, இதென்னடா வம்பா போச்சு என்ற ரேஞ்சில் இருந்த கவின், லாஸ்லியாவிடம் பழகுவதை மட்டும் நிறுத்தவில்லை. இதனால் சாக்ஷி - கவின் - லாஸ்லியா என்ற முக்கோண காதல் கதையால் கடந்த சில வாரங்களாக பிக் பாஸ் வீட்டில் பெரும் பிரச்சனைகள் வெடித்து பூதாகரமானது.
இந்நிலையில், வைல்ட் கார்ட் எண்ட்ரியில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள கஸ்தூரி கவினிடம் இந்த காதல் கான்செப்ட் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளார். அது தொடர்பாக இன்றைய 47ம் நாள் எபிசோடிற்கான முதல் புரொமோவில், '4 பொண்ண Love பண்றது காமெடியா உங்களுக்கு? என்று கஸ்தூரி கேட்டார்.
அதைத் தொடர்ந்து வெளியாகியுள்ள 2வது புரொமோ வீடியோவில், ‘பத்தவச்சிட்டியே பரட்ட’ என்ற ‘16 வயதினிலே’ படத்தின் சூப்பர்ஹிட் வசனத்துடன் பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் எண்ட்ரியில் உள்ளே சென்ற கஸ்தூரி கலகத்தை ஆரம்பிக்கிறார். இந்த பத்தவச்சிட்டியே பரட்ட என்றதற்கு காரணம், கவின் மனதில் இருப்பது யார் என்பதை பொதுவில் போட்டு உடைத்தார்.
அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற ரேஞ்சில், கவின் மனசில் இருப்பது லாஸ் தான் என்றதுடன், லாஸுக்கு ஓ போட சொல்லி அமக்களப்படுத்தினார். இதை கேட்ட ஹவுஸ்மேட்ஸ் சிரித்துவிட்டு போக, சாக்ஷி முகம் மட்டும் சுருங்கிவிட்டது. இதன் விளைவு இந்த வாரம் முழுவதும் தொடருமோ என்ற அச்சம் கலந்த சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.