விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரத்துக்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் உயிரை கொடுத்து விளையாடி வருகின்றனர்.
16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இதுவரை ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா, ரேஷ்மா, சரவணன் ஆகியோர் வெளியேறியுள்ள நிலையில், மீதமுள்ள 10 போட்டியாளர்கள் இடையே டாஸ்க்கிற்கான போட்டி கடுமையாகியுள்ளது.
இந்த வாரத்துக்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில் வீசப்படும் காயின்களை அதிகளவில் சேகரித்து காப்பாற்றி வைத்துக் கொள்ளும் போட்டியாளரை நாமினேட் செய்ய முடியாது என பிக் பாஸ் அறிவித்தார். அதையடுத்து, ஹவுஸ்மேட்ஸ் ஆர்வமாக காயின்களை சேகரித்து புள்ளிகளை பெற்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று 45வது நாள் எபிசோடிற்கான முதல் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், ‘மதுமிதா-அபிராமி, சாக்ஷி-லாஸ்லியா, கவின் -சேரன், தர்ஷன் - சாண்டி, முகென் - ஷெரின், எந்த ஜோடியிடம் கில்லர் காயின் உள்ளதோ அவர்களின் மொத்த மதிப்பெண்ணில் இருந்து 50% குறைக்கப்படும் ’என பிக் பாஸ் தெரிவிக்கிறார். அதையடுத்து, ஜோடியாக பிரிந்துள்ள ஹவுஸ்மேட்ஸ் தங்களிடம் இருக்கும் கில்லர் காயினை மற்ற ஜோடிகள் மீது வீசுகின்றனர். அதில் இருந்து மற்றவர்கள் தப்பிக்கின்றனர்.
இதற்காக மூச்சு இறைக்க ஓடி விளையாடுகின்றனர். பிக் பாஸ் வீட்டில் இதுவரை சண்டை, மோதல், காதல் என்று உணர்ச்சி மிகுந்த சம்பவங்களே ஹைலைட்டான நிலையில், இன்றைய எபிசோடில் பிக் பாஸ் கொடுத்திருக்கும் டாஸ்க் ஹவுஸ்மேட்ஸை விளையாட்டில் தீவிரம் காட்டச் செய்துள்ளது.