விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடந்த நீயா நானா விவாத மேடையில் பேசப்பட்ட தலைப்பு ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் ஒரு சில விஷயங்களை தெளிவாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் இடையில் இருப்பது நட்பா அல்லது அதையும் தாண்டி புனிதமானதா என்ற தலைப்பின் கீழ் இரு அணிகளாக பிரிந்திருந்த போட்டியாளர்கள் பேசினர். இதில் லொஸ்லியா கவின் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து சம்மந்தப்பட்டவர்கள் இடையில் இருக்கும் உறவு என்ன என்பதை கவின் தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்த அபிராமி, இந்த வீட்டில் எனக்கும் முகெனுக்கும் இடையில் இருப்பது நட்பையும் தாண்டி புனிதமானது என்று ஏற்கனவே சபையில் தான் பதிவு செய்திருப்பதாக கூறினார். இதற்கு எதிர் அணியில் இருந்த முகென் ராவ், எனக்கும் அபிராமிக்கும் இடையில் இருப்பது என்னை பொறுத்தவரை நட்பு தான். ஆனால் அபிராமி அவர் மனதில் இருப்பதை என்னிடம் கூறிவிட்டார். எங்களுக்குள் ஒருவிதமான புரிதல் இருக்கிறது. அது எங்களுக்குள் மட்டும் இருகக் வேண்டும் என நினைக்கிறேன் என கூறினார்.
சபையில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரின் முன்னிலையிலும், அபிராமி மீது தனக்கு இருப்பது நட்பு தான் என முகென் கூறியது அபிராமியை வருத்தத்தில் ஆழ்த்தியது. இதற்காக வருந்திய அபிராமியை முகென் பின்னர் சமாதானம் செய்தார். அவர் கூறுகையில், ‘இது நாம் ஏற்கனவே பேசியது தானே. சபையில் அதை சொல்வதனால் எந்த பாதகமும் இல்லை என உணர்கிறேன். நீ பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டு போனால் வருத்தமாக இருப்பதாகவும்’ அவர் கூறினார்.