விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரத்துக்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் இன்று கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் முதலாவதாக விளையாடிய மீரா-சாண்டி இணை சிறப்பாக விளையாடியிருந்தாலும், இந்த விளையாட்டு விவாதம், வாக்குவாதம் என வீண் சர்ச்சையாக மாறியது.
பிக் பாஸ் அறிவித்த டிக் டிக் டிக் டாஸ்கில், ஆக்டிவிட்டி ரூமில் வைக்கப்பட்டுள்ள 300 கடிகாரத்தில் 2 கடிகாரத்தில் மட்டும் அலாரம் செட் செய்து வைக்கப்பட்டிருப்பதாகவும் 10 வினாடிகளில் அதனை கண்டிபிடித்து நிறுத்தினால் மதிப்பெண்கள் கிடைக்கும் எனவும், 10 வினாடிகள் தாண்டியும் கண்டுபிடிக்காவிட்டால் 100, 100 மதிப்பெண்கள் குறையும் என்ற ரூல்ஸை பிக் பாஸ் தெரிவித்தார்.
இதையடுத்து, முதலாவதாக சாண்டி மற்றும் மீரா ஆகியோர் விளையாடினர். அப்போது, சாண்டி 18 வினாடிகளில் 2 கடிகாரங்களில் இருந்த அலாரத்தை கண்டுபிடித்து நிறுத்தினார். விளையாடி முடிந்த பிறகு ஜாலியாக பேசிக் கொண்டிருந்த கவின், ‘நீ போயிருக்கவே தேவையில்ல.. சாண்டி அண்ணாவே பண்ணிருப்பாரு’ என்றதும் மீராவுக்கு கோபம் வந்துவிட்டது.
இதனை ஒரு பிரச்சனையாக பேசினார், இதையறிந்து கவின் தான் விளையாட்டாக பேசியதாகவும், புண்பட்டிருந்தால் மன்னித்துவிடு என்று கூறியும் சமாதானம் செய்தார். இருந்தும் இந்த பிரச்சனை கேப்டன் வரை செல்ல, கேப்டன் ஒரு பஞ்சாயத்தை கூட்டியதில் கவின் மீரா மீது மரண காண்டில் இருந்தார்.
இதை உணர்ந்த மீரா சமரசம் பேச முயன்று மறுபடியும் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இந்த பிரச்சனையை பெரிதாக்கியது கேப்டன் சாக்ஷி தான் என்ற பிம்பத்தை ஏற்படுத்தினார். மாற்றி மாற்றி பேசிய மீராவை பார்த்து கடுப்பான கேப்டன் சாக்ஷி, நீ என்ன லூசா இல்ல லூசு மாதிர் நடிக்கிறியா என்று ஆதங்கப்பட்டார். பிறகு சம்மந்தப்பட்ட சாண்டி, கவின், சாக்ஷி, மீரா, ரேஷ்மா ஆகியோர் அமர்ந்து இந்த பிரச்சனையை இத்துடன் முடித்துவிடலாம் என கூறி முற்றுப்புள்ளி வைத்தனர்.