பழம்பெரும் நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் பேத்தியும் பிரபல பாடகியுமான ரம்யா என்எஸ்கே இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, இமான் என தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் ஏராளமான ஹிட் பாடலகளை பாடியுள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3யில் கலந்துகொண்ட அவர் பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமானார்.
அவருக்கும் நடிகர் சத்யா என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையுடன் இருக்கும் ஃபோட்டோ பகிர்ந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ''நான் ஏன் எடை அதிகமாக இருக்கிறேன் என்று நிறைய பேர் என்னிடம் கேட்டார்கள். காரணம் இதுதான்.
சமீபத்தில் எனக்கு குழந்தை பிறந்தது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. இனி என் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவேன்'' என்று தெரிவித்துள்ளார்.