தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. சுமார் 70 நாட்களை இந்த நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில், இனி வரும் நாட்கள் அனைத்து போட்டியாளர்கள் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால், அனைவரும் சிறப்பாக ஆடி வருகின்றனர்.
Also Read | "ஆவேசமா பேசுன விஷயத்த அமுதவாணன் பையன் இப்டி Fun பண்ணிட்டாரே".. விக்ரமன் குடுத்த Reaction!!
இதில், ‘எல்லோரும் ஃப்ரீஸ்’ விளையாட்டை பிக் பாஸ் ஆட ஆரம்பிக்க, அப்போதுதான் அனைவருக்கும் சந்தேகம் வந்தது, ஆஹா இது அந்த டாஸ்க்ல்ல ? என்று. அவர்கள் எண்ணப்படியே அது விருந்தினர் வரும் டாஸ்க் தான். ஆனால் என்ன? விருந்தினர்கள் வரும்போது எவ்வளவு பெரிய ஆசையையும் அன்பையும் பாசத்தையும் உணர்ச்சியையும் கட்டுப்படுத்திக்கொண்டு ஃப்ரீஸ் ஆகி பிக்பாஸின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு நிற்க வேண்டும். ஃப்ரீஸ், ரிலீஸ், லூப் என பிக்பாஸ் வார்த்தைகள் இறுக்க கட்டிப்ப்போட, அவர் உத்தரவு கொடுத்த பிறகே அதில் இருந்து ரிலீஸ் ஆகி, அவரவர் விருந்தினர்களுடன் சென்று உறவாட முடியும்.
இதில் கூடுதல் விஷயம் என்னவென்றால், கருப்பு கண்ணாடி. ஆம், அந்த கண்ணாடி அணிந்துகொண்டால், வருபவர்கள் யார் என்பதே தெரியாது. இதனிடையே லூப்பில் அமுதவாணன், ஷிவினை திரும்ப திரும்ப அடித்துக்கொண்டிருக்க, திரும்பிப் பார்த்த ஷிவினுக்கு காத்திருந்ததோ சர்ப்ரைஸ். ஆம், ஷிவினுக்கு விருந்தினர்கள் வந்தனர். ஆனால் ஷிவினின் அம்மாவும் அக்காவும் சில காரணத்தால் வரமுடியாமல் போனதாக சொல்லப்பட்டது.
வந்தவர்களை ஓடி கண்ணீர் வழிய கட்டியணைத்துக் கொண்டார். வந்தவர்கள் ‘கூடப் பொறக்காத அக்கா’வான நிவேதா மற்றும் அவருடன் கண்ணன் என்பவர் வந்திருந்தனர். ‘எல்லோரும் நல்லாயிருக்காங்களா??’ என்று விசாரித்த ஷிவின் பிறகு அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஷிவின் நன்றாக ஆடுவதாகவும், இன்னும் கொஞ்சம் ஜாலியாக விளையாட வேண்டும் என்றும் அவர்கள் அட்வைஸ் கூறினார்கள். வார்த்தைகளின் மீது கவனம் வைக்கச் சொல்லி எச்சரிக்கை மணியும் அடித்தனர். பின்னர் விடைபெற்றனர்.
எனினும் தம் குடும்பத்தினர் வராததால், கண்கலங்கிய ஷிவினுக்கு ரச்சிதா ஆறுதல் சொல்ல பிக்பாஸ் வீடே நெகிழ்ச்சி கோலம் கண்டது.
Also Read | அம்மாவ பார்த்ததும் உணர்ச்சி பொங்க அழுத ரச்சிதா.. கலங்கவைத்த பிக்பாஸ் ப்ரோமோ..