www.garudavega.com

"எருமை மாட்டுக்கு புடவ கட்டுன மாதிரி".. ரச்சிதா குறித்து ஜனனியின் சர்ச்சையான கமெண்ட்.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

Bigg Boss Season 6 Tamil Janany Comment about Rachitha

இதன் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு நிறைந்தும் சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் இதனை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

அதே போல, பிக்பாஸ் வீட்டில் தற்போது ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் அரங்கேறி வருகிறது. அது மட்டுமில்லாமல், இந்த டாஸ்க்கின் பெயரில் ஏராளமான பஞ்சாயத்து பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது

பொம்மை டாஸ்க், அரசவை, அருங்காட்சியகம் டாஸ்க், கோர்ட் டாஸ்க் என அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களுக்கு இடையே நிறைய சண்டைகளும் நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்படுத்தி இருந்தது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள்  பங்கேற்றனர்.

Bigg Boss Season 6 Tamil Janany Comment about Rachitha

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

Bigg Boss Season 6 Tamil Janany Comment about Rachitha

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் பிக்பாஸ் வீட்டில் ரச்சிதா குறித்து ஜனனி சொன்ன கமெண்ட் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது. ரச்சிதா புடவை அணிந்து தோற்றமளிப்பது குறித்து தனலெட்சுமியிடம் பேசும் ஜனனி, "எருமைமாட்டுக்கு புடவை கட்டுன மாதிரி உள்ளது" என கூறியுள்ளார். தற்போது இந்த கமெண்ட் விவாத பொருளாக மாறியுள்ளது.

Bigg Boss Season 6 Tamil Janany Comment about Rachitha

இச்சூழலில் ரச்சிதாவின் பிரிந்து வாழும் கணவர் தினேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இதுபோல் மேலும் பல இதயங்களை வென்றிடுங்கள். நீங்கள் விசுவாசமற்ற நண்பர்கள், தேவையற்றவைகளை எல்லாம் தவிர்த்து விட்டால் கடைசியில் வெற்றி பெறுவீர்கள். எல்லோரையும் போல உங்கள் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்" என தினேஷ் பதிவிட்டுள்ளார்.

"எருமை மாட்டுக்கு புடவ கட்டுன மாதிரி".. ரச்சிதா குறித்து ஜனனியின் சர்ச்சையான கமெண்ட்.? வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Season 6 Tamil Janany Comment about Rachitha

People looking for online information on BIGGBOSS season 6, BIGGBOSS TAMIL, Dinesh, Janany, Rachitha Mahalakshmi will find this news story useful.