Naane Varuven M Logo Top
www.garudavega.com

VIDEO: அடேங்கப்பா..சொர்க்கத்தையே மிஞ்சும் BIGG BOSS வீடு! சும்மா ஜொலிக்குதே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சியின் முக்கிய அம்சமான பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

BIGG Boss season 6 Tamil House Tour Video

Also Read | 19 வகை உணவுகளுடன் விருந்து.. அசந்து போன பூஜா ஹெக்டே! அம்மா ஸ்பெஷல்னா சும்மாவா

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்பொழுதும் தமிழில் ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடைபெறும். கடந்த இரண்டு சீசன் மட்டும் கொரோனா பெருந்தொற்று காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி வரை நடைபெற்றது.

சமீபத்தில் முடிந்த ஐந்தாவது சீசனும் கடந்த 4வது சீசனை போல் கடந்த அக்டோபர் மாதம் தான் தொடங்கியது.

BIGG Boss season 6 Tamil House Tour Video

பிக்பாஸ் சீசன் 6 தமிழ், வரும் அக்டோபர் 9 முதல் ஞாயிறு மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும்  என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சுமார் 100 நாட்கள் வரை இருக்கும் நிலையில், அவர்களுக்கு ஏராளமான போட்டிகள்  வழங்கப்படும்.

BIGG Boss season 6 Tamil House Tour Video

இப்படி அனைத்து சவால்களையும் கடந்து, கடைசி வரை இருக்கும் நபர்களில் ஒருவர், வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். முன்னதாக, அந்த வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

BIGG Boss season 6 Tamil House Tour Video

இந்நிலையில் இந்த பிக்பாஸ் சீசனில் பயன்படுத்தப்படும் வீட்டின் புகைப்படங்கள் & வீடியோ வெளியாகி உள்ளன. நீச்சல் குளம், படுக்கையறை, சமையலறை, ஹால், உணவருந்தும் இடம், ஓய்வறை ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பளபளப்பான பூச்சு பூசப்பட்ட நிலையில் உள்ளன. ஏராளமான சொகுசு வசதியுடன் இந்த வீடு அமைந்துள்ளது.

BIGG Boss season 6 Tamil House Tour Video

முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசனில் ராஜூ ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | ஒரே வாரத்தில் இமாலய வசூலை குவித்த பொன்னியின் செல்வன்.. மொத்த வசூல் நிலவரம்! வேற லெவல்

VIDEO: அடேங்கப்பா..சொர்க்கத்தையே மிஞ்சும் BIGG BOSS வீடு! சும்மா ஜொலிக்குதே வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

BIGG Boss season 6 Tamil House Tour Video

People looking for online information on Bigg Boss season 6 Tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Bigg Boss Tamil Season 6 House, Kamal Haasan, Vijay Television will find this news story useful.