விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டு ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதையடுத்து முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனும் ஒளிபரப்பானது. கடந்த இரு சீசன்களை போல் இந்த சீசனையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.
முதல் இரண்டு சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் காதலும், சர்ச்சைகளும் அதிகம் இருப்பதாக மக்கள் மத்தியில் ஒரு பரவலான கருத்து நிலவுகிறது. இந்நிலையில், பிக் பாஸ் முதல் சீசனின் ரன்னர்-அப் ஆன கவிஞர் சினேகன் Behindwood-ன் Personals வித் தாரா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசினார்.
அவர் பேசுகையில், ‘முதல் இரண்டு சீசன்களை விட இந்த சீசனில் காதல் அதிகமாக இருக்கிறது. அதெப்படி சாத்தியம்? காதலை எப்படி மும்னொழிவது, எப்படி வழிமொழிவது என்ற தெளிவு இல்லை. வயது கோளாறு காரணமா அல்ல இப்படி ஏதாவது செய்தால் தான் ரீச்சாவோம் என்று மனதளவில் தயாராக வந்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை’.
‘முதல் சீசனில் ரியாலிட்டி இருந்தது. ஆனால் அதற்கு அடுத்ததாக வந்த 2, 3 சீசன்களில் ரியாலிட்டி இல்லையோ என்று தோன்றுகிறது. சண்டை போடுறாங்க அடுத்த 4 செகெண்ட்ல போய் கட்டிப்புடிச்சி சமாதானம் ஆகிடறாங்க. இது இயல்பான குணம் இல்லையே, அப்படி இருந்துவிட்டால் எதிரிகளே இருக்க முடியாது’.
‘இந்த சீசனில் எல்லாருமே நடிக்கிறார்கள், அப்பப்போ ஒரிஜினாலிட்டி வெளியில வருது ஆனா ஏதாவது பண்ணி பூசி மொழுகிடுறாங்க. போட்டியாளார்களின் தனித்தன்மை இதுவரை வெளிப்படவில்லை. அதே போல் சமையல் அறையெல்லாம் சுத்தமாக இல்லாமல் அழுக்காக உள்ளது. பார்க்கவே அருவறுப்பாக இருக்கிறது’ என சினேகன் தெரிவித்துள்ளார்.