www.garudavega.com

தமிழ் புத்தாண்டில் புது கார்.. அசத்திய ரச்சிதா! விலை ரூ.22 லட்சமா? அப்படி என்ன ஸ்பெஷல்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சீரியல்கள் மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

bigg boss rachitha bought new MG Car full details

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி, பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய சீரியல்களில் நடித்த ரச்சிதா மகாலட்சுமி, முன்னதாக நடித்த சரவணன் மீனாட்சி சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.

அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகின பிரபல பிரம்மாண்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் அண்மையில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பல்வேறு டாஸ்குகளை தாக்குப்பிடித்த நீண்ட நாட்கள் தன்னை தக்கவைத்திருருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலமும் ரச்சிதாவுக்கு நிறைய ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர்

இந்த நிலையில் தான், ரச்சிதா மகாலட்சுமி தற்போது 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கி இருக்கிறார். தம்முடைய இந்த புத்தாண்டு இந்த காருடன் தொடங்குவதாகவும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரச்சிதாவுடைய ரசிகர்கள் அவரை வாழ்த்து வருகின்றனர்.

எம்ஜி ஹெக்டார் என்று அழைக்கப்படும் மாடல் காரான இந்த கார் 1800 கிலோ எடை கொண்டது. ஸ்டைல், ஸ்மார்ட், ஸ்மார்ட் ப்ரோ, ஷார்ப் ப்ரோ மற்றும் புதிய ரேன்ச் ஆன டாப்பிங் சேவி ப்ரோ என பல வேரியண்ட் ட்ரிம்களில் கிடைக்கும் இந்த கார்  ஒரு டூயல்-டோன் மற்றும் ஆறு மோனோடோன் வண்ணங்களில் கிடைக்கிறது.  MG-யின் ஹெக்டர் மாடல் 5 பயணிகள் வரை அமரும்படியும், ஹெக்டர் பிளஸ் மாடல் ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் கொண்ட லேஅவுட்களிலும் உள்ளது.

1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் (143PS/250Nm) மற்றும் 2 -லிட்டர் டீசல் (170PS/350Nm) ஆகிய என்ஜின் ஆப்ஷன்கள் கொண்டது.  இரண்டு யூனிட்களும் ஆறு-வேக மேனுவலுடனும், பெட்ரோல் இன்ஜினுடன் எட்டு-வேக CVT ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.  4-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஏழு இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே ஆகிய அம்சங்களும் உள்ளன.

தவிர ஆறு ஏர்பேக்குகள், ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் மேம்பட்ட டிரைவர்-உதவி அமைப்புகள் (ADAS) அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த கார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss rachitha bought new MG Car full details

People looking for online information on ரச்சிதா, ரச்சிதா மகாலட்சுமி, Bigg boss, MG Hector, MG Hector Car, Rachitha Mahalakshmi will find this news story useful.