ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சியை, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Also Read | பிக் பாஸ் வீட்டில்.. விக்ரமன்-ஐ தொடர்ந்து.. "தமிழ்நாடு" என்ற வார்த்தையை சொன்ன அசிம்!!
இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், ரச்சிதா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர்.
கடைசிவாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ADK வெளியேறினார். இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் சிறப்பு விருந்தினராக வந்த விஜய் டிவி டிடி ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் தம்முடைய பார்வையை பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில் அனைவரையும் பார்த்து முடித்துவிட்டு டிடி பிக்பாஸ் வீட்டை விட்டு முன்பு பேசிய பிக்பாஸ், “டிடி.. சமீபத்துல பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்து ஹவுஸ்மேட்ஸை பார்த்து பேசிட்டு போனவங்க எல்லாம் போகும்போது ஹவுஸ்மேட்ஸ் முகத்தில் குழப்பம் தெரிந்தது, இப்போ அனைவர் முகத்திலும் புன்னகை தெரியுது.” என குறிப்பிட்டு பாராட்டினார். டிடியும் நெகிழ்ந்தார்.
இதேபோல், விஜே மகஸ்வரி டிடியிடம் பேசும்போது, “ஒவ்வொருவர் பற்றியும் சும்மா சொல்ல வேண்டும் என சொல்லாமல், ஒவ்வொருவரையும் உண்மையில் கவனித்து சொல்லி இருக்கிறீர்கள், அதற்கு நன்றி” என தெரிவித்தார்.
Also Read | “தம்பி இல்ல.. அண்ணன்னு ஐஸ்வர்யா ராஜேஷ் டென்சன் ஆவாங்க”.. டிடி சொன்ன சுவாரஸ்யம்! bigg boss